உங்கள் இரவு வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

திருமணம் எனும் பந்தத்தில் இருமனம் இணைந்து ஒருமணமாய் வாழ்வை துவங்குவார்கள். ஒருவருடன் ஒருவர் இணைந்து இரு உடல் ஒரு உயிராய் வாழ துவங்கி விடுவார்கள். பெற்றோர், நண்பர் மற்றும் உறவினருடன் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும் கூட கணவருடன் பகிர்ந்து கொள்ள முடியும். அவர்களுக்குள் இப்படி தான் இருக்க வேண்டும் எனும் வரையறையோ, விதிமுறைகளோ கிடையாது. இங்கு படுக்கையறையில் தம்பதிகள் கூச்சமின்றி செய்யும் 8 செயல்கள் பற்றி பார்க்கலாம்.

1 முகபாவனைகள்

சிலர் துணையுடன் கொஞ்சி மகிழும் தருணத்திலோ அல்லது உடலுறவில் ஈடுபடும் போதோ வித்தியாசமான முகபாவனைகளை வெளிப்படுத்துவார்கள்.

2 நகைச்சுவை(ஜோக்)

ஜோக் என்பவை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடியதாக இருந்தாலும், சில அந்தரங்க ஜோக்களை கணவன், மனைவிக்குள் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். இவை பெரும்பாலும் உறவில் ஈடுபடும் போதே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

3 வாய்விட்டு சிரித்தல்

நாம் சிரிக்கும் போது யாரும் ஏதும் சொல்லி கிண்டல் செய்வார்களோ என்று அளவாக சிரிக்க வேண்டி இருக்கும். ஆனால், படுக்கையறையில் துணையுடன் இருக்கும் போது எவ்வித தயக்கமும் இன்றி சத்தமாக வாய் விட்டு சிரிக்கலாம்.

4 தனியாக பேசுதல்

சிலர் வேலை தொடர்பாகவோ அல்லது எதிர்கால வாழ்கை தொடர்பாகவோ தனியாக பேசும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இதை மற்றவர்கள் பார்த்தால் கேலி, கிண்டல்களுக்கு ஆளாவார்கள். ஆனால், படுக்கை அறையில் அந்த பிரச்சனை இருக்காது. சுதந்திரமாக எதையும் செய்யலாம்.

5 வாயு தொல்லை

வாயு வெளியேறுவது உடல் ஆரோக்கியத்திற்கான அறிகுறி என ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் இருக்கும் போது இது சங்கடப்படுத்தும். ஆனால், அதுவே தம்பதிகளுக்குள் சாதாரண ஒன்றாக இருக்கும்.

6 குளியல்

இருவரும் சேர்த்து குளியலறையை பயன்படுத்துவது, தம்பதிகளுக்குள் மட்டுமே முடியும். ஒருவர் குளிக்கும் போது மற்றொருவர் பல் துலக்குவது, இருவரும் சேர்ந்து குளிப்பது போன்றவை சாதாரண ஒன்றாக இருக்கும்.

7 ஆடை

நாம் குறிப்பிட்ட வயதிற்கு மேல் மற்ற ஆண்களின் ஆடையை அணிவதை தவிர்த்திருப்போம். ஆனால், திருமணத்தின் பின் மாற்றி அணிவது சாதாரண ஒன்றாக இருக்கும்.

8 வேலை

படுக்கை அறையில் அலுவலக வேலை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்கவில்லை என்றால், ஒருவர் மற்றொருவரை தொந்தரவு செய்வது உறுதி.

Leave a Reply

%d bloggers like this: