கருவிலிருக்கும் குழந்தையின் வாழ்க்கையை காட்டும் நெகிழ வைக்கும் படங்கள்…

நம் அனைவரது வாழ்வும் கருவறையில் இருந்தே துவங்குகிறது. ஆனால் உங்கள் செல்ல குழந்தை கருவில் உருவாகி இருப்பதை உங்களால் நம்பவே முடியாத அளவில் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால், உங்கள் குழந்தையும், அவர்களின் வளர்ச்சியையும் உங்கள் கண்களால் பார்க்க முடியாது. இங்கு கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றிய மனமுருக செய்யும் படங்களை பார்க்கலாம்.

கருத்தரித்த 4 நாட்களுக்கு பிறகு

என்ன இது? இந்த கருவுற்ற முட்டை பார்ப்பதற்கு மனிதனை போல் இல்லையே எனலாம். ஆனால், இது உயிருடன் இருக்கும் குழந்தை. குழந்தையின் பாலினம் மற்றும் DNA போன்றவை முன்பே தீர்மானிக்கப்பட்ட கருவுற்ற முட்டை. இது அடுத்த 9 மாதங்களுக்கு குழந்தை வளர்ச்சிக்கு தேவையானவற்றை கொண்டிருக்கிறது.

கர்ப்பத்தின் 5 – 6 வாரங்கள்

இப்போது குழந்தை அதன் பிறப்பு எடையில் கால் பகுதி தான் இருக்கும். குழந்தையின் மூக்கு, வாய் மற்றும் காது போன்றவை உருவாக துவங்கி இருக்கும். குழந்தையின் இதயம் தாயின் இதயத்தின் இருமடங்காக நிமிடத்திற்கு 100 முறை துடித்து கொண்டிருக்கும். குழந்தையின் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் மூளை அதிர்வுகள் 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பே துவங்கி இருக்கும்.

கர்ப்பத்தின் 7-வது வாரம்

கர்ப்பத்தின் 10-வது வாரம்

சிறுநீரகம், குடல், மூளை மற்றும் கல்லீரல் போன்ற அனைத்து பாகங்களும் வேலை செய்ய துவங்கி இருக்கும். கால்களின் கீழ் பகுதி மற்றும் கைகளை அசைக்க துவங்கி இருப்பார்கள்.

12 வாரங்களில்

இப்போது குழந்தை கை, கால்களை அசைத்து, உங்கள் வயிற்றில் உதைக்க துவங்கி இருக்கும். உங்கள் கைகளால் வயிற்றை தொடுவதன் மூலம் நீங்கள் உங்கள் பதிலை அவர்களுக்கு தெரிவிக்கலாம்.

16 வாரங்களில்

16 வது வாரத்தில், குழந்தையின் உடல் ஒவ்வொரு அம்சத்திலும் வளரத் தொடங்கும். அவர்களின் முடி மற்றும் காலில் நகங்கள் வளர துவங்கும். குழந்தையின் இதயம் ஒவ்வொரு நாளும் 23 லிட்டர் இரத்தத்தை சுற்றோட்டம் செய்து கொண்டிருக்கும்.

18 முதல் 20 வாரங்களில்

குழந்தை இப்போது வாயில் விரல் வைக்க துவங்கி இருக்கும் மற்றும் அவர்களது விரலில் ரேகைகள் கூட உருவாகி இருக்கும்.

6 -வது மாதத்தில்

இப்போது குழந்தை வெளியில் இருக்கும் ஓசைகளை கவனிக்க துவக்கி இருக்கும். குழந்தையின் நாடி துடிப்பும் அதிகரித்திருக்கும். குழந்தை நன்கு வளர்ந்திருப்பதால் விக்கல் எடுப்பதை அம்மாவின் வயிற்றில் உணரலாம்.

6 – 7 மாதத்தில்
8 -வது மாதத்தில்

குழந்தைக்கு இப்போது அம்மாவின் குரலை கேட்கவும், அடையாளம் கண்டறியவும் முடியும். இப்போது குழந்தை பிங்க் வண்ணத்தில் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். குழந்தையின் உடலில் அதிக கொழுப்பு அவசியம். குழந்தை பிறந்தவுடன் அவர்கள் உடலின் வெப்பநிலையை தக்க வைக்க உதவுகிறது. 

Leave a Reply

%d bloggers like this: