குழந்தையின் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இந்த காணொளியை பாருங்கள்…

Video credits : Homemakers corner

கருவில் இருக்கும் போதும், குழந்தைக்கு தாய்ப்பால் மட்டும் கொடுக்கும் வரையும் தாய் மட்டுமே உணவை பார்த்து சாப்பிட வேண்டும். குழந்தைக்கு ஆறுமாதம் ஆனதும் அவர்களுக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம் என குழப்பம் ஏற்பட துவங்கும். குழந்தைக்கு கொடுக்கும் உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து கொடுப்பார்கள். ஆனாலும், சில குழந்தைகளின் உடல் எடை குறைவாக இருக்கும். இங்கு குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவின் செய்முறையை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

1 ஓட்ஸ் – 1 கப்

2 அவல் – 1 கப்

3 பொட்டுக்கடலை – ½ கப்

4 முந்திரி – 10

5 ஏலக்காய் – 1

செய்முறை

1 மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிதமான சூட்டில் வெறும் வானலியில் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து நன்கு ஆற வைத்து கொள்ளவும்.

2 முந்திரி பருப்புடன் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். தனியாக

ஓட்ஸ் மற்றும் அவல் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

3 பின் அரைத்து வைத்தவற்றை ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

4 இதை நன்கு கொதிக்க வைக்கப்பட்ட சூடு நீருடனோ அல்லது பால் சேர்த்து ஊறவைத்து குழந்தைக்கு கொடுக்கலாம். இதில் வெள்ளம் சேர்த்தோ அல்லது மிளகு மற்றும் உப்பு சேர்த்தோ குழந்தைகளுக்கு விருப்பமான சுவையில் கொடுக்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: