பெண் குழந்தைகளுக்கான வித்தியாசமான 10 பெயர்கள்

கருவில் உருவான உடனேயே பெற்றோர்க்கு என்ன குழந்தையாக இருக்கும் என ஆர்வம் தோன்ற துவங்கி விடும். பெண் குழந்தைகளை வேண்டாம் என நினைத்த காலம் மாறி பெண் குழந்தைகளை பெற்றோர் எதிர்பார்க்கும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகள் வீட்டின் மஹாலட்சுமியாகவும், குட்டி தேவதைகளாகவும் பார்க்கப்படுகிறார்கள். அப்படி இருக்கும் அவர்களின் செல்ல பெண் குழந்தைகளுக்கான அழகிய 10 பெயர்களை இங்கு பார்க்கலாம்.!

1 சையனா

சையனா என்றால் நிலவு என்று பொருள். நிலவை போல் பிரகாசிக்கும் உங்கள் பட்டு குழந்தைக்கு ஏற்ற பெயர்.

2 கிரிஷிகா

கிரிஷிகா என்றால் அன்பு, கருணை என்று அர்த்தம். உங்கள் அன்பை திருட வந்த அற்புத அன்பிற்கு சிறந்த பெயர்.

3 ஆன்ச்சல்

ஆன்ச்சல் என்றால் பாதுகாப்பான தங்குமிடம் என்று பொருள். உங்கள் அன்பை தக்க வைத்து கொள்ள வந்த செல்லத்துக்கான பெயர்.

4 ஷகீரா

ஷகீரா என்றால் மலை என்று பொருள் படும். உங்களால் வாழ்வில் உயர்ந்து உங்களை உயர்த்த போகும் சிறிய தேவதைக்கான பெயர்.

5 தனிஷா

தனிஷா என்றால் இளவரசி, தேவதை மற்றும் லட்சியம் என்று பொருள் படும். உங்கள் வீட்டின் குட்டி இளவரசிக்கான அழகிய பெயர்.

6 வைபவி

வைபவி என்றால் உயர்ந்த, செல்வம் மிகுந்த என்று பொருள். உங்கள் அழகிய குழந்தை செல்வத்திற்கான சிறந்த பெயர்.

7 மதியாழினி

மதி என்றால் அறிவு மற்றும் நிலவு என்றும் பொருளாகிறது. யாழினி என்பது சரஸ்வதியின் மற்றோர் பெயராகவும், மென்மையான மற்றும் இசைக் கருவி எனவும் அர்த்தப்படும்.

8 ரிதுஷினி

ரிதுஷினி என்றால் இசை, பருவ காலம் என பொருள். உங்கள் வாழ்வில் சந்தோச இசையை மீட்ட வந்த பட்டுக் குழந்தைக்கு பொருத்தமான பெயர்.

9 மென்மொழி

மென்மொழி என்றால் மென்மையான, அன்புடன் பேசுதல் என்று அர்த்தம். உங்கள் வாழ்வின் அர்த்தத்தமாய் வந்த செல்லத்திற்கு சிறந்த பெயர்.

10 விதுளா

விதுளா என்றால் சந்திரன் என்று பொருள். இரவில் ஒளி கொடுக்கும் சந்திரனை போல், உங்கள் வாழ்வில் ஒளியேற்ற வந்த உங்கள் மகாலட்சுமிக்கான பெயர்.

Leave a Reply

%d bloggers like this: