மாதவிடாய் சீரற்று இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது சோதனைக் காலம் என்றே சொல்லலாம். இந்த காலத்தில் பெண்களுக்கு மிக மோசமான அனுபவமாக இருக்கும். அவர்களது உடல் மிகவும் சோர்வாகவும், மனம் தடுமாற்றத்துடனும் இருக்கும். மாதவிடாய் வேண்டாம் என விரும்பினாலும், அவர்களுக்கு வேறு வழியில்லை. 28 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி இருந்தே ஆக வேண்டும். சீராக இல்லை என்றால், அது பெண்களுக்கு பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்போதையை காலத்தில் பருவநிலை மாற்றம், துரித உணவு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இங்கு சீரற்ற மாதவிடாய்க்கான 7 வீட்டு மருத்துவ குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

1 மஞ்சள்

மஞ்சள் இயற்கையிலேயே மருத்துவ தன்மை கொண்ட பொருள். இது உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது. இதிலிருக்கும் வலியை குறைக்கும் தன்மையையும், அலர்ஜிக்கு எதிராக செயல்படும் பண்பும் மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாக செயல்படுகின்றன. மஞ்சள் தூளை உணவுப் பொருட்களுடனோ அல்லது திரவ பொருள்களுடன் சேர்த்தோ உட்கொள்ளாமல். கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை பால், தேன் அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். சில வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.

2 கற்றாழை

சீரற்ற மாதவிடாயை குணப்படுத்த இயற்கை கற்றாழை சிறந்த பொருளாகும். கற்றாழையின் மேல் தோலை நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் ஜெல்லுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து, தினமும் காலை உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால், இரண்டாவது மாதத்தின் முடிவில் மாற்றத்தை உணர்வீர்கள். உங்களது மாதவிடாய் காலத்தில் இதை சாப்பிட கூடாது.

3 பப்பாளி காய்

பழுக்காத அல்லது பச்சை பப்பாளி கருப்பையில் உள்ள தசை நார்களைக் கட்டுப்படுத்தவும், கருப்பை சுவர்களை ஆற்றவும் உதவுகிறது. இந்த பப்பாளி துண்டுகளை தினமும் காலை உணவாக எடுத்து கொள்ளலாம். இந்த சுவை பிடிக்காதவர்கள் இனிப்பு சுவையுடைய தயிர் அல்லது தேன் கலந்து சாப்பிடலாம்.

4 இஞ்சி

இஞ்சி செரிமானத்திற்கு உதவும் சிறந்த மருத்துவ பொருள் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அது மாதவிடாய் பிடிப்புகளுக்கு பெரிதும் உதவுகிறது. அரை தேக்கரண்டி இஞ்சி சாற்றை தண்ணீரில் கலந்து சில நிமிடங்கள் சூடேற்றி, சிறிது சர்க்கரை கலந்து பருகவும். இதை ஒவ்வொரு சாப்பாட்டு வேலைக்கு பிறகு என தினமும் 3 முறை குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

5 இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை உடலில் ஒரு வெப்பமயமாக்கல் விளைவை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியை சீர்படுத்த உதவுகிறது. நீங்கள் தினமும் பால் குடிப்பவராக இருந்தால், பாலுடன் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி சேர்த்து குடிக்கலாம். இலவங்கப்பட்டை துண்டுகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து தேநீர் போன்று பருகலாம்.

6 எள்

எள்ளில் அதிக அளவில் நிறைந்திருக்கும் லிக்னன்ஸ் அதிகப்படியான ஹார்மோனை ஒன்றிணைக்க உதவுகிறது. இதில் நிறைந்திருக்கும் கொழுப்பு அமிலம் ஆரோக்கியமான ஹார்மோன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எள்ளை வெறும் பாத்திரத்தில் வறுத்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இதை தினமும் சாப்பிடும் போது நல்ல பலன் கிடைக்கும்.

7 யோகா / தியானம்

மன அழுத்தம் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலே கொடுக்க பட்டிருந்த அனைத்து பொருட்களும் சிறந்த பலன் அளித்தாலும், மன அழுத்தத்தை குறைக்காது. யோகாவும், தியானமும் உங்களை மன அழுத்தத்திலிருந்து காக்கும் சிறந்த வழிகளாகும். மேலும் இவை, உங்கள் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன.    

என் இனிய தமிழ் தோழிகளே! நீங்கள் மாதவிடாய் நாட்களில் உபயோகிப்பது எதுவாயினும், அது உங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள்..! உங்களுக்கே சரியான பதில் கிடைக்கும்..! நீங்கள் பயன்படுத்துவதோ துணிகளோ நாப்கின்களோ அல்லது கப்களோ எதுவாயினும் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்தவும்..! சுற்றுச்சூழல் கெடாவண்ணம் அப்புறப்படுத்தவும்.! பெரும்பாலும் நல்ல பாதுகாப்பான நாப்கின்களை உபயோகிப்பது நல்லது..! அதுவே, எளிதானது, பொருளாதாரத்திற்கும் ஏற்றது..! 

Leave a Reply

%d bloggers like this: