பெண்களை அழகாக காட்டுவதில் கூந்தலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தலை விரும்பாத பெண்களே கிடையாது. முடி குறைவாக இருக்கிறது என கவலைப்படும் பெண்களை விட அடர்த்தி குறைவாக இருக்கிறது என கவலைப்படும் பெண்களே அதிகம். இப்போதையை காலத்தில் அழகு, பராமரிக்க முடியவில்லை மற்றும் நேரம் செலவிட முடியவில்லை என முடியை சிறிதாக வெட்டி கொள்வதால் நீளத்தை விட அடர்த்தியே கவனத்தில் கொள்ளப்படுகிறது. இங்கு கருமையான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெற செய்யவேண்டியவற்றை பார்க்கலாம்.
கருவேப்பிலை மாஸ்க்
1 வெந்தயம் 2 தேக்கரண்டி, சீரகம் 2 தேக்கரண்டி மற்றும் கருவேப்பிலை கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளவும். வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு நாள் முன்பு ஊற வைக்க வேண்டும்.
2 நன்கு ஊறிய வெந்தயம் மற்றும் சீரகத்துடன் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
3 இதனை தலையில் தடவி 45 நிமிடங்களுக்கு பிறகு தலையை அலசவும். வாரம் இருமுறை செய்தால், நல்ல மாற்றத்தை காணலாம்.
கருவேப்பிலை எண்ணெய்
1 கருவேப்பிலையை சுத்தம் செய்து உலர வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெயை சுட வைத்து, அதில் கருவேப்பிலையை சேர்த்து குறைவான தீயில் சில நிமிடம் வைக்கவும். பின்னர் ஆற வைத்து வடிகட்டி அதனை வாரம் ஒருமுறை உபயோகித்தால் நரை முடி வராது. முடி வளர்ச்சி தூண்டும்.
2 கருவேப்பிலை, செம்பருத்தி பூ மற்றும் மருதாணியை அரைத்து சிறிது சிறிதாக தட்டி காயவைத்து, அதை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தினசரி உபயோகித்தால் நல்ல பலன் தரும்.
தயிர்
கருவேப்பிலை பொடி அல்லது கருவேப்பிலையை அரைத்து தயிர் கலந்து தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இது முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தியை தருவதோடு பொடுகு, வறட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கிறது.
குறிப்பு
கருவேப்பிலையை பொடி செய்து தினமும் 2 தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இவை ஆரோக்கித்தோடு கருகருவென அடர்த்தியான கூந்தலையும் பெற உதவும்.