குட்டையாக இருக்கும் பெண்களின் கர்ப்ப காலம் எப்படி இருக்கும்?

ஒரு குழந்தையை கருவில் சுமப்பது என்பது மிகப் பெரிய வரமாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தில் உங்களது உடலில் இருக்கும் ஊட்டச்சத்தை பொருத்து தான் குழந்தையின் உடல் எடை, வளர்ச்சி ஆகியவை அமையும். எனவே கர்ப்ப காலத்தில் நேர நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. 

கர்ப்ப காலத்தில் உயரத்திற்கு ஏற்ப எடையை பராமரிக்க வேண்டியது அவசியம். அதே போல் குழந்தை வளர வளர உங்களது உடல் எடையை சரியான விகிதத்தில் அதிகரிக்க வேண்டியதும் அவசியமாகிறது. இந்த பகுதியில் உயரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உண்டாகும் பிரச்சனைகள் குறித்து காணலாம்.

சிசேரியன்

உயரம் குறைவாக உள்ள பெண்களுக்கு இடுப்பு பகுதியில் உள்ள எலும்பானது சிறியதாகவும், குறுகிய நிலையிலும் இருக்கும். இதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகும்.

மூச்சு திணறல் 

கர்ப்ப காலத்தில் அனைவருக்கும் உட்கார்ந்து எழுதல் போன்ற செயல்பாடுகளின் போது மூச்சு திணறல் உண்டாகும். அதே போல தான் இவர்களுக்கும் மூச்சு திணறல் உண்டாகும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. பொதுவான ஒன்று தான் எனவே பயப்பட தேவையில்லை.

உடல் எடை 

கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டுமென மருத்துவர்கள் கூறுவார்கள். அதற்காக அதிகளவிலான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில்லை. அதிக கலோரிகள் தேவை என்பதால் நல்ல சத்தான உணவை சாப்பிடுவதே மிக முக்கியம். அப்போது தான் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ச்சியடையும்.

கலோரிகள் 

கர்ப்பமடைவதற்கு முன் எடுத்து கொண்ட கலோரி அளவிலிருந்து, 100 முதல் 300 கலோரி வரையே கர்ப்பமடைந்த பின் பெண்களுக்கு தேவைப்படும்.பொதுவாக கர்ப்ப காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12 முதல் 16 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும்.

குறைந்த உடல் எடை 

குறைந்த உடல் எடை கொண்ட பெண்களின் எடை, கர்ப்ப காலத்தில் 13 முதல் 18 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். 

கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களுக்கு 1 முதல் 2 கி.கி., வரை உடல் அதிகரிக்க வேண்டும். அதன் பின் ஒவ்வொரு வாரமும் அரை கிலோ கிராம் வரை அதிகரித்து கொண்டே வர வேண்டும்.

அதிக உடல் எடை 

கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதல்ல. அது கர்ப்பிணிகளையும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்கும், சத்துக்கள் மிக அவசியம். கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிக எடை காணப்பட்டால், அதை குறைக்க முயற்சி செய்ய கூடாது. 

பல வகையான சத்துள்ள உணவுகளையும் சாப்பிடலாம். மருத்துவரின் ஆலோசனை பெற்று, நடைபயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை செய்ய வேண்டும்.

உப்பு 

கர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ள கூடாது. கர்ப்பிணிகள் தங்களது உணவில் குறைந்த அளவு உப்பு சேர்த்துக் கொள்வதே நல்லது. உப்பு தூவப்பட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது கூடாது.

இரத்த குறைபாடு? 

இரத்த குறைபாடு சிறிதளவு இருந்தால் அது பாதிப்பை உண்டாக்காது. மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்ளுங்கள். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள். உணவுகளை தவிர்க்காமல் இருங்கள். மாதுளை, முட்டை, திராட்சை, மீன், ஸ்ட்ராபெர்ரி, ப்ரோகோலி, ஆரஞ்ச் ஜூஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு சில உணவுகள் இரும்பு சத்தை உடல் உறிஞ்ச தடையாக இருக்கும். காபி, டீ, சோயா ஆகியவற்றை சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டு விட்டால் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு இரும்பு சத்து உணவுகளை சாப்பிடுங்கள்.

Leave a Reply

%d bloggers like this: