பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது கவனிக்க வேண்டியவை

குழந்தை கருவில் தோன்றியது முதல் தாயின் பயணம் குறைய துவங்கி இருக்கும். அதிலும் முதல் மூன்று மாதங்கள் மற்றும் இறுதி மூன்று மாதங்களில் பயணத்தை தவிர்க்கும் சூழல் கூட ஏற்பட்டிருந்திருக்கலாம். குழந்தை பிறந்தும் 3 முதல் 6 மாதங்கள் வரை பயணங்களை தவிர்ப்பார்கள். குழந்தை பிறந்த உடன் வெளியில் எடுத்து செல்ல முடியாது. அதே போல் குழந்தையுடன் எதில் பயணம் செய்தாலும் பிறந்த உடன் பயணிக்க முடியாது. சில சந்தர்ப்பங்களில் பயணிக்க நேர்ந்தால், பெற்றோர் சிலவற்றை கவனிக்க வேண்டியது அவசியம். குழந்தையுடன் பயணிக்கும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.

1 விமானம்

குழந்தை பிறந்து 2 வாரங்களாவது இருக்க வேண்டும். குழந்தையுடன் விமான நிலையத்தில் பயணம் செய்ய சில குறிப்பீடுகள் உள்ளன. ஒவ்வொரு விமானத்தின் குறிப்பீடுகளும் வேறுபடும், எனவே அதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை பிறந்ததில் பிரச்சனை, அதாவது குறைப்பிரசவம் அல்லது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் விமானத்தில் பயணம் செய்யும் போது விமான நிறுவனங்களிடம் தெரிவிக்க வேண்டும். விமானத்தில் பயணிக்கும் போது குழந்தையின் காதுகளில் காற்று புகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

2 இரயில்

நீங்கள் இரயிலில் பயணம் செய்தால் குழந்தை மிகவும் சந்தோஷமாக பயணிக்கும். ஆனால் குழந்தைக்கு தேவையான மருந்து, ஆடை, நாப்கின்கன் போன்றவற்றை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

குழந்தையை அறிமுகமில்லாதவர்களிடம் கொடுப்பது போன்றவற்றை செய்யாதீர்கள். அவர்களது கை சுத்தமில்லாமல் இருந்தால் குழந்தையை பாதிக்கும் அபாயம் உள்ளது. முடிந்தவரை நெடுந்தூர பயணத்தை தவிர்ப்பது சிறந்தது.

3 கார்

குழந்தைகளை காரில் அழைத்து செல்வது பாதுகாப்பானது தான் என்றாலும், காரின் வேகம் மிதமாக இருப்பது சிறந்தது. காரின் கண்ணாடிகளை இறக்கி விடும் போது காரின் வேகத்தில் வரும் காற்றால் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படலாம். குழந்தைக்கு தேவையான அனைத்தையும் உடன் எடுத்து செல்ல வேண்டும். காரில் பயணம் செய்வதென்றால் பேபி கார் ஷீட் பயன்படுத்துவது நல்லது.

குழந்தையை சூரிய கதிர் படும்படி வைக்க வேண்டாம். சூரிய கதிர்கள் பட்டால் சருமம், கண்ணிற்கு பிரச்சனை ஏற்படுத்துவதோடு, உடல் வறட்சியை உண்டாக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைக்கு மூன்று வயதிற்கு மேல் இருந்தால், எந்த ஒரு பயமுமின்றி, கார், இரயில் அல்லது விமானம் போன்ற எதிலும் அச்சமின்றி பயணத்தை மேற்கொள்ளலாம்.

Leave a Reply

%d bloggers like this: