6 முதல் 12 மாத குழந்தைகளுக்கான ஜூஸ் – வீடியோ

குழந்தைகளுக்கு உணவூட்ட துவங்கி பின்னர் பெற்றோர் ஒவ்வொன்றையும் மிகவும் கவனத்துடன் செய்வார்கள். குழந்தைகளுக்கான உணவை தேர்வு செய்து கொடுப்பார்கள். குழந்தைகளுக்கு எப்போதும் உணவு, பால் மற்றும் தண்ணீர் போன்றவற்றை கொடுத்தால், அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். இந்த காலங்களில் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கலாம் என்பதை பெற்றோர் அறிந்தாலும், எப்போது எப்படி கொடுக்கலாம் என்பதை அறிவதில்லை.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது மசித்தோ அல்லது ஜூஸ் செய்தோ கொடுப்போம். சில பழங்களை மட்டும் வாங்கி வந்து தொடர்ந்து அவற்றை கொடுத்து கொண்டே இருப்போம். சில பெற்றோர் ஆப்பிள் மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஒன்று என்பதை போல் தொடர்ந்து ஆப்பிள் மசியல் மற்றும் ஆப்பிள் ஜூஸ் என கொடுத்து கொண்ட இருப்பார்கள். இது குழந்தைகளுக்கு உணவின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். இங்கு குழந்தைகளுக்கு எப்படி ஜூஸ் கொடுக்கலாம் என்பதை பற்றிய வீடியோவை பார்க்கலாம்.

Video Credits : Amma Samayal

குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் அனைத்து சுவையையும் கொடுக்கும் போது தான் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் அனைத்து பழங்களின் சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும். தினமும் ஒன்றாக மாற்றி கொடுத்தால் அவர்களும் விரும்பி உண்வார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். 

Leave a Reply

%d bloggers like this: