கருத்தரிக்க உதவும் வைட்டமின்கள்

திருமணம் ஆன சில மாதங்களிலேயே அனைவரும் கேட்கும் ஒரு கேள்வி ஏதும் விசேஷம் உண்டா என்பது தான். தம்பதிகள் சில காலம் அவற்றை விட்டு விலகி இருந்தாலும், பெரியவர்களின் கேள்விக்கு பதிலுரைக்க முடியாமல் திணறுவர்கள். சில பெண்களுக்கு கருவுதலில் பல பிரச்சனைகள் இருக்கும். அதற்கு பல காரணங்களும் இருக்கும்.

இன்றைய காலத்தில் பெண்கள் உடல் எடையை கட்சிதமாக வைத்து கொள்ள உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்கிறர்கள். இதில் சில உணவுகளை முற்றிலும் தவிர்ப்பார்கள். இதனால் சில வைட்டமின்கள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. திருமணமான பெண்கள் உயிர்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கருத்தரிக்கலாம். இங்கு கருத்தரிக்க உதவும் வைட்டமின்கள் பற்றி பார்க்கலாம்.

கருவுறுதல் பிரச்சினை

கருத்தரித்தலில் குறைபாடு உடைய 100 பெண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வைட்டமின் மாத்திரைகளும், மற்றொரு குழுவுக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரைகளும் அளிக்கப்பட்டன. கூடவே ஆரோக்கியமான, சமச்சீரான உணவும் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டன.

ஆய்வின் தொடக்கத்தில் இந்த இரண்டு குழுவில் இடம்பெற்ற பெண்களுக்கும் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாதவிலக்கு சுழற்சி சீரான முறையில் இல்லாமல் இருந்தது. ஆய்வின் முடிவில் தினமும் வைட்டமின்கள் வழங்கப்பட்ட பெண்களில் 60 சதவிகித பெண்கள் அதாவது 50 பேரில் 30 பேர், கர்ப்பம் தரித்தனர்.

அதே சமயம் ஃபோலிக் அமிலம் கொடுக்கப்பட்ட பெண்களில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே கர்ப்பம் தரித்தனர். போலிக் அமிலம் – வைட்டமின் பெண்கள் தாங்களாகவே ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கர்ப்பமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட, வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதினால் விரைவாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

ஃபோலிக் அமிலம்

போலிக் அமிலம் கர்ப்பம் தரிப்பதற்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அதைக்காட்டிலும் வைட்டமின் எடுத்துக் கொண்டவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாகவும், பக்கவிளைவுகள் இல்லாமலும் இருக்கும்.

வைட்டமின் சி, பி6

வைட்டமின் சி, வைட்டமின் பி6 உள்ள உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதன் மூலம் பெண்களின் கருவுறுதல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்.

Leave a Reply

%d bloggers like this: