கருமுட்டை தானம் பற்றிய தகவல்கள்..!

ஒவ்வொரு மாதமும் பெண்ணின் மாதவிடாய் நாட்களின்போது கருமுட்டைகள் உற்பத்தியாகின்றன. அவை கருவாக மாறாத நிலையில் வெளியேறுகின்றன. அவற்றை தானமாகப் பெற்று, கணவனின் விந்தணுவுடன் இணைத்து, செயற்கை முறை கருத்தரித்தல் முறையில் கரு உருவாக்கி, சம்பந்தப்பட்ட மனைவியின் கர்ப்பப் பையில் வைத்து சிசுவை வளர்க்கிறார்கள்! இந்தியாவில் 1986 ஆண்டுக்கு பிறகு கருமுட்டை தானம் அறிமுகமானது. கருமுட்டை தானம் செய்வது தொடர்பாக இங்கு சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

யாருக்கு தேவை ?  

ஒரு பெண் கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக கருமுட்டை தானமாக பெறப்படுகிறது. இதன் மூலம் சோதனைக் குழாய் முறையில் கருத்தரிக்க முடியும். ஒரு பெ‌ண்ணு‌க்கு கருமு‌ட்டை‌ உருவா‌க்க‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள், சினைப்பை முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள், கருமுட்டை உருவாகாத நிலையை அடையாமல் சிதைந்து போகும் நிலையில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு கருமுட்டை தானமாகப் பெறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், பாரம்பரிய குறைபாடு கொண்டவர்கள் தங்களது கருமுட்டையைப் பயன்படுத்தாமல், இன்னொரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானமாகப் பெற்று கருத்தரிக்க விரும்புவார்கள். 

யாரெல்லாம் கருமுட்டை தானம் கொடுக்கலாம் ? 

கருமுட்டை தானம் கொடுக்கும் பெண் 25 முதல் 30 வயதுக்குள்ளும் ஆரோக்கியமானவராகவும் இருக்க வேண்டும். கருமுட்டை உண்டாவதற்காக அந்தப் பெண்ணுக்கு 10 நாட்களுக்கு ஹார்மோன் மாத்திரை அல்லது ஊசி கொடுக்கப்படும். அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான உடல்வாகு கொண்டவராக இருப்பது அவசியம். 

சோதனைகள் 

கருமுட்டை பெறப்படும் சூழலில் ஹெபடைட்டிஸ் கிருமிகள் இருக்கின்றனவா, ஹெச்.ஐ.வி மற்றும் பால்வினை நோய்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதெல்லாம் சோதிக்கப்படும். இதற்கான கட்டணங்களை கருமுட்டை தானம் பெறுகிறவரே ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்… கருமுட்டை தானம் தந்தவர் சட்டரீதியாக குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது. 

கருமுட்டை சேகரிப்பு 

ஒரு பெண்ணுக்குக் கருமுட்டை உற்பத்தியைத் தூண்ட ஹார்மோன் ஊசிகள் போடும்போது, அவை ஒன்றுக்கு மேலான முட்டைகளை உருவாக்கும். குழந்தை உருவாக ஒரு முட்டை மட்டுமே தேவை. ஆனால், அதற்கு ஒரு முட்டையை மட்டுமே நம்ப முடியாது. முட்டைகள் நிறைய இருந்தால்தான் சில கருக்களாவது கிடைக்கும். ஏனென்றால், எல்லா கருக்களுமே ஆரோக்கியமாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று கருக்கள் வரை கருப்பையினுள் வைக்கப்படும். 

 

உறைநிலையில் கருமுட்டை 

பத்து கருக்களாவது கிடைத்தால்தான் அவற்றிலிருந்து ஆரோக்கியமான இரண்டோ, மூன்றோ தேர்ந்தெடுக்க முடியும். குறைந்தது பத்து முட்டைகளாவது வந்தால்தான், அவற்றிலிருந்து தரமான எட்டு கருக்களாவது உருவாக்க முடியும். அவற்றில் அதிகபட்சமாக மூன்று கருக்களைக் கருப்பையில் வைத்துவிட்டு, மீதம் உள்ளவற்றை உறைநிலையில் வைக்கப்படும். 

எவ்வளவு காலம்  

கருமுட்டை ஒரு பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது, 37 டிகிரி செண்டிகிரேட் வெப்பத்தில் இருக்கும் அதனை மைனஸ் 194 செண்டிகிரேடுக்கு மாற்றி லிக்விட் நைட்ரஜனில் உறைய வைக்கப்படும். இதனை க்ரையோலாஜிக் என்று சொல்லப்படும். இதனை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாக்கலாம். 

எச்சரிக்கை 

ஒரு பெண் ஆறு முறைக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது ஆபத்தானது. ஒரு முறை தானம் செய்வதற்கும் அடுத்த முறை தானம் செய்வதற்கும் இடையில் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது இடைவேளி இருக்க வேண்டும். கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டுவதற்காகக் கொடுக்கப்படும் கொனடோட்ரோஃபின் ஹார்மோன் அளவு கொஞ்சம் அதிகமானாலும், உயிரே பறிபோகும் அபாயம் இருக்கிறது. அடிக்கடி கருமுட்டை தானம் செய்தால் கருப்பைப்பை புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

Leave a Reply

%d bloggers like this: