6 முதல் 12 மாத குழந்தைக்கான மதிய உணவு – வீடியோ

குழந்தைகளுக்கு சில பெற்றோர் எப்போதும் இட்லி, தோசை போன்ற உணவுகள் மற்றும் பழ மாசியல்களை தொடர்ந்து கொடுத்து கொண்டே இருப்பார்கள். இதனால் குழந்தைகள் உண்ண அடம்பிடித்து உணவை தவிர்ப்பார்கள். இங்கு குழந்தைகளுக்கு மதிய வேளையில் கொடுக்க கூடிய உணவு தயாரிப்பு முறைகளை காணலாம்.

1 துவரம் பருப்பு சாதம்

மூன்று தேக்கரண்டி அரிசி உடன், ஒரு தேக்கரண்டி துவரம் பருப்பை சேர்த்து கழுவி குக்கரில் போடவும். அதனுடன் முக்கால் டம்ளர் தண்ணீர், பூண்டு ஒரு பல், சிறிதளவு சீரக தூள், உப்பு மற்றும் பெரும்காயம் சேர்க்கவும். பின் கழுவி தோல் சீவிய 2 கேரட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிய துண்டு பச்சை மிளகாயையும் அதனுடன் சேர்க்கவும். நன்கு வெந்ததும் மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

2 பாசிப்பருப்பு கீரை சாதம்

ஒன்றரை தேக்கரண்டி அரிசியுடன், கால் தேக்கரண்டி பாசிப்பருப்பு மற்றும் சிறிதளவு கீரையை கழுவி குக்கரில் போடவும். அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பூண்டு ஒரு பல், சிறிதளவு வெங்காயம், தக்காளி, புளி, சீரக தூள், உப்பு, மிளகாய் மற்றும் பெரும்காயம் சேர்க்கவும். பின் நன்கு வேகவைத்து சிறிது நெய் சேர்த்து மசித்து கொடுக்கலாம்.

குறிப்பு : வெயில் காலத்தில் சிறுகீரை, பருப்பு கீரை மற்றும் தண்டு கீரையும், மழை காலத்தில் அரைக்கீரையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

3 முள்ளங்கி சாதம்

கழுவி தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிய ஒரு முள்ளங்கி உடன் ஒரு பல் பூண்டு, சிறிது தக்காளி, சிறிதளவு சீரகம், மிளகு தூள், பெருங்காயம், உப்பு மற்றும் இரண்டு தேக்கரண்டி அரிசியை கழுவி சேர்க்கவும். இதனுடன் முக்கால் டம்ளர் நீர் சேர்த்து நன்கு வெந்ததும் மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

4 முட்டை கோஸ் கடலை பருப்பு சாதம்

100 கிராம் முட்டை கோஸ் உடன் சிறிதளவு கடலை பருப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி அரிசி சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு சீரகம், பெருங்காயம், பூண்டு ஒரு பல், பச்சை மிளகாய் சிறிய துண்டு, தக்காளி மற்றும் வெங்காயத்துடன் முக்கால் டம்ளர் நீர் சேர்த்து வேக விடவும். வெந்ததும் சிறிது நெய் சேர்த்து மசித்து குழந்தைகளுக்கு ஊட்டவும்.

5 உருளை கிழங்கு சாதம்

நறுக்கிய அரை உருளை கிழங்குடன், சிறிதளவு தக்காளி, வெங்காயம், மிளகாய், பெருங்காயம், உப்பு மற்றும் ஒரு பல் பூண்டு சேர்க்கவும். அதனுடன் கழுவிய இரண்டு தேக்கரண்டி அரிசி சேர்த்து நன்கு வேகவைத்து, நெய் சேர்த்து மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

6 ரசம் சாதம்

அரை தக்காளி, சிறிதளவு புளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கரைத்து, இதனுடன் பூண்டு இரண்டு பல், சிறிதளவு பெருங்காயம், சீரகத்தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். சிறிதளவு சாதத்துடன் ரசம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

7 தயிர் சாதம்

சிறிதளவு சாதத்துடன் கொஞ்சம் பால் சேர்த்து, பாலில் அளவில் பாதியாக தயிர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து மசித்து குழந்தைகளுக்கு ஊட்டவும்.  

Leave a Reply

%d bloggers like this: