உங்கள் ராசி கூறும் நீங்கள் எவ்வகை தாயார் என்று..!

நம்மில் பல பேர் இந்த ராசி, ஜோசியம், ஜாதகம் இவற்றையெல்லாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் ஜாதக, ஜோசியத்திலும் சில அறிவியல் பூர்வமான உண்மைகள் ஒளிந்துள்ளன. அதாவது ஜோசியர் கூறும், ஜாதக, ஜோசியங்கள் முற்றிலும் உண்மையல்ல; பல ஜோசியர்கள் ஜோதிடத்தில் ஒளிந்திருக்கும் உண்மையை முற்றிலுமாக அறிவதில்லை. இத்தகைய ஜாதக, ஜோசிய, ராசியைக் கொண்டு நீங்கள் எவ்வகை தாய் என்பதை இப்பதிப்பில் விளக்கியுள்ளோம்..!!  

1. மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 19) சுதந்திரமான தாய்

ஒழுக்கத்திற்கும், கடின உழைப்பிற்கும் பாத்திரமான தாயாரே! உங்கள் குழந்தையின் அருகில் நீர் இல்லையெனினும், குழந்தையின் மீது உங்கள் கண் எப்போதும், எவ்விதத்திலும் கண்காணித்துக் கொண்டிருக்கும். உங்கள் குழந்தைகள் மிகவும் ஒழுக்கமானவர்களாக திகழ்வர், உங்கள் வளர்ப்பால். உங்கள் கட்டளையே சாசனமாக, வீட்டில் அரங்கேற்றப்படும்; மீறினால், குடும்பத்தார் உங்கள் ருத்ர தாண்டவத்தைக் காண நேரிடும்.

2. ரிஷபம் (ஏப்ரல் 20 – மே 20) நிலையான தாய்

குழந்தைகளே வாழ்வு, அவர்களின் படிப்பே உங்கள் கடமை என வாழ்ந்துவரும் தாயாரே! நீங்கள் எப்பொழுதும் நேரத்தை வீணாக்க விரும்பமாட்டீர். உங்கள் குழந்தைகளை படிப்பதில், அதிகம் ஊக்குவிப்பீர். படிப்பில் குழந்தைகள் முன்னேற்றம் காட்டினால், நிச்சயம் அவர்களுக்கு உங்களிடமிருந்து பரிசு உண்டு. உங்கள் குழந்தைகளுக்கு எப்பொழுதும் சிறந்த பொருட்களை, சிறந்த விஷயங்களையே வழங்குவீர்.

3. மிதுனம் (மே 21 – ஜூன் 20) இளமையான தாய்

உங்கள் குழந்தைகளுக்கும், மற்ற எவருக்கும் தோழியான தாயாரே! நீங்கள் எப்பொழுதும் பதற்றமில்லாமல், எதையும் தைரியாமாக எதிர்கொள்வீர். குழந்தைகளிடமும் அவர்கள் நண்பர்களிடமும் மிகவும் தோழமையுடன் பழகுவீர்; குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அன்னை நீர். எப்பொழுதும் இளமையுடன் காட்சியளிப்பீர்; உங்கள் குழந்தைகளையும் அவ்வாறே தோற்றம் பெறச் செய்வீர்.

4. கடகம் (ஜூன் 21- ஜூலை 22) உணர்ச்சிபூர்வமான தாய்

உங்கள் குழந்தையின் மீது அளவுகடந்த பாசம் கொண்ட தாயாரே! நீங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமானவர்; உங்கள் குழந்தைகள், உங்கள் குடும்பமே உங்கள் உலகம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை உங்கள் குழந்தைகளுக்காகவே வாழ்கிறீர். எப்பொழுதும் உணர்ச்சிப் பெருக்கு, உங்களில் ஏற்படும்; சில சமயங்களில் இது உங்களுக்கு வெறுப்பை சம்பாதித்து தரவும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

5. சிம்மம் ( ஜூலை 23 – ஆகஸ்ட் 22) நம்பிக்கையான தாய்

நம்பிக்கையை உங்கள் மூச்சாகவும் ஆற்றலை உங்கள் உடைமையாகவும் கொண்ட தாயாரே! நீங்கள் எப்பொழுதும் ஆற்றலுடனும், சுறு சுறுப்பாகவும் காணப்படுவீர். உங்கள் குழந்தைகள் எந்த தவறு செய்தாலும் உங்கள் கண்ணாலேயே அவர்களை சரி செய்து விடுவீர். உங்கள் குழந்தைகள் படிப்பிலும், விளையாட்டிலும் வெற்றி வாகை சூடுவர்; இதற்கு உங்களது ஊக்கமே காரணமாய் திகழும்.

6. கன்னி (ஆகஸ்ட் 23 – செப்டம்பர் 23) ஏற்பாடான தாய்

எல்லாம் அறிந்த ஏற்பாடான தாயாரே! நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை; கூகுளின் இன்னொரு வடிவம் என்றே உங்களைக் கூறலாம். கர்ப்பம், பிரசவம், பெற்றோர் பராமரிப்பு, குழந்தைக்கு சரியான பாலி, கல்லூரி, வீட்டு பராமரிப்பு என எல்லாம் உங்களுக்கு அத்துப்படி. உங்கள் குழந்தைகளும் உங்களைப் போலே வளர்வர்.

7. துலாம் ( செப்டம்பர் 23 – அக்டோபர் 22) சமநிலைத் தாய்

எங்கும் எப்பொழுதும் சமநிலை வழுவாத தாயாரே! உங்கள் குழந்தைகளுக்கு அனைத்து விஷயங்களையும் சமநிலையோடு கையாள கற்றுக் கொடுப்பீர்; உங்கள் குழந்தைகள், படிப்பானாலும், விளையாட்டானாலும் சமநிலையோடு, அதில் சாதித்துக் காட்டுவர். உங்கள் குழந்தைகள் ஏற்ற தாழ்வு பாராட்டாது, சமநிலை ஞானத்தோடு வளர்வர்.

 

8. விருச்சிகம் ( அக்டோபர் 23 – நவம்பர் 21) பலசாலி தாய்

பலத்தை உங்கள் ஆதாரமாக கொண்ட தாயாரே! நீங்கள் எங்கும், எதிலும், எந்த சூழ்நிலையிலும் உங்கள் நம்பிக்கையை இழக்காது, பலத்தோடு பிரச்சனைகளை கையாள்வீர். உங்கள் குழந்தைகள் எல்லாவற்றிலும் சரியாக, மிகச் சரியாக திகழுமாறு வளர்ப்பீர்; எந்தவொரு பிரச்சனைக்கும் உங்களிடம் சமரசம் செல்லாது; நியாயமான விஷயங்களை மட்டுமே நீங்கள் செய்வீர் மற்றும் குழந்தைகளுக்கும் கற்பிப்பீர்.

9. தனுசு ( நவம்பர் 22 – டிசம்பர் 21) சாகசத் தாய்

சாகசத்திலும் பயணம் செய்வதிலும் விருப்பம் மிகுந்த தாயாரே! நீங்கள் பயணம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்; பற்பல சாகசங்களை நிகழ்த்திப் பார்ப்பதிலும் உங்கள் ஆர்வம் அணையில்லாது பாயும். உங்கள் இல்லற கடமைகளையும் இதர கடமைகளையும் சரியாக நிறைவேற்றுவீர். உங்கள் குழந்தைகள் உங்களை எண்ணி பெருமிதம் கொள்வர். உங்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவை உங்கள் குழந்தைகளுக்கு வற்றாத ஊக்கமாய் விளங்கும்.

10. மகரம் ( டிசம்பர் 22 – ஜனவரி 19) இலட்சியவாதி தாய்

எவ்வித இடையூறையும் சமாளித்து, உங்கள் இலக்கை அடையும் தாயாரே! நீங்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் பெண்மணி அல்ல. உங்கள் இலட்சியங்களை, எப்பாடுபட்டாவது அடைந்தே தீருவீர். உங்கள் குழந்தைகளும் உங்களைப் போலவே இலட்சியவாதியாக திகழ்வர்.

11. கும்பம் (ஜனவரி 20 – பிப்ரவரி 18 ) புதுயுகத் தாய்

காலத்திற்கேற்றவாறு வாழ்க்கையை நகர்த்தும் கலை அறிந்த தாயாரே! நீங்கள் புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும், குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுபவராக திகழ்வீர். குழந்தைகளை புதுப்புது விஷயங்கள் கற்க ஊக்குவிப்பீர். அன்றைய தொழில்நுட்பம் தொடங்கி, இன்றைய தொழில்நுட்பம் வரை அனைத்தையும் கரைத்துக் குடித்திருப்பர்.

12. மீனம் (பிப்ரவரி 19 – மார்ச் 20) வளர்ப்புத் தாய்

வளர்ப்பதில் வல்லுனரான தாயாரே! குழந்தை வளர்ப்பில் சிறந்தவர், நீங்களே! குழந்தைகளுக்கு சத்தான உணவினை ஊட்டிவிடுதல் முதல் மற்ற செயல்களில் அவர்களை ஊக்குவிப்பது வரை உங்கள் வளர்ப்பு ஓயாது. உங்களின் எண்ணமும் செயலும் குழந்தைகளை நன்கு வளர்ப்பதிலேயே உறைந்திருக்கும். குழந்தைகள் உங்கள் வளர்ப்பால், வாழ்வில் உச்சத்தை அடைவர்.

Leave a Reply

%d bloggers like this: