உடல்நலனை பற்றி அறிய முக ஜோசியம்..!

இன்றைய காலகட்டத்தில் ஜாதகம், ஜோசியம் போன்றவைற்றை மூட நம்பிக்கை என்று சொல்லும் ஒரு தரப்பினர் இருந்தாலும், அவற்றின் மீது நம்பிக்கை வைக்கும் மற்றொரு தரப்பினரும் இருக்கிறார்கள். கிளி ஜோசியம், எலி ஜோசியம், குரங்கு ஜோசியம், பிறந்த நேர ஜோசியம், எண்கணித ஜோதிடம், கைரேகை ஜோசியம் நாடி ஜோதிடம் எத்தனை வகை ஜோதிடங்கள் இருக்கின்றன.  

முகத்தை பார்த்தே ஜோசியம் சொல்வது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இது நம் நாட்டில் மட்டும் தான் என்று நினைத்து விடாதீர்கள். மேல்நாடுகளில் இது குறித்து படிப்பே இருக்கிறதாம். இது முகத்தை வைத்து ஜோதிடம் கூறுவது, ஆனால் நாம் பார்க்க போவது முகத்தை வைத்து உடல் நலனை கூறும் ஜோதிடம்.

அது எப்படி முடியும், என்ன ஏமாற்றுகிறீர்களா? என்றால் இல்லை. நமது உடல் அதிசியக்க தக்க ஒன்று. உடலின் பாகங்களில் ஏற்படும் பாதிப்புகளை முகம், கண், கைகள், கால்கள் என பல பாகங்களில் தோன்றும் அறிகுறிகளை கொண்டே கண்டறியலாம். உதாரணமாக, உங்கள் கண் மஞ்சளாக தோன்றினால் மஞ்சள் காமாலை என்பார்களே அதை போன்று தான்.

1 வாயின் ஓரத்தில் வெடிப்பு

வாயின் ஓரத்தில் வெடிப்பு ஏற்பட்டால், நீ யாரோ சாப்பிட்ட எச்சிலை சாப்பிட்டிருக்கிறாய் அதனால் தான் ஏற்படுகிது என்பார்கள். ஆனால், அது உண்மையல்ல. உங்கள் உடலில் வைட்டமின் பி சத்தின் குறைபாடு இருந்தால், வாயின் ஓரத்தில் வெடிப்புகள் ஏற்படும். நீங்கள் வைட்டமின் பி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

2 சுருக்கங்கள்

கண்களுக்கு கீழே சுருக்கம் என்றால், சரியாக உறங்கவில்லை, அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் அலைபேசியில் விளையாடுவது போன்றவற்றை செய்வதால் தான் கண்களுக்கு கீழே சுருக்கங்கள் ஏற்படுகிறது என்று பல காரணங்கள் இருக்கின்றன. வயதிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல், அளவிற்கு அதகிமாக கண்களுக்கு கீழ் சுருக்கங்கள் ஏற்போட்டால், நீங்கள் அதிகமாக புகைப்பிடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

3 வெளிறிய சருமம்

முகம் வெளிறிய நிறத்தில் இருந்தால், எதையாவது பார்த்து பயந்திருப்பாய் என்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. உங்கள் முகத்தின் சருமம் வெளிறிய நிறத்தில் காட்சியளித்தால், உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதற்கான அறிகுறி.

4 மஞ்சள் திட்டுகள்

சிலருக்கு முகத்தில் மஞ்சள் போட்டது போன்று சில இடங்களில் திட்டு திட்டாக காணப்படும். இது எதனால் என்று யோசித்திருக்க கூட மாட்டோம். முகத்தில் மஞ்சள் திட்டுகள் போன்று தோன்றினால், உடலில் அதிக கொழுப்பு சேர்ந்துள்ளது என்று உணர்த்துவதாம். அதற்காக மஞ்சள் போட்டு குளித்தால் கொழுப்பு அதிகம் உடலில் இருக்கிறது என்று வதந்தியா கிளப்பிடாதீர்கள்.

5 தாடை பகுதியில் பருக்கள்

பெண்களுக்கு இயற்கையாகவே எண்ணெய் சருமம், பொடுகு தொல்லை மற்றும் மாதவிடாய் காலத்தில் அறிகுறியாக முன்போ அல்லது முடியும் காலத்திலோ பருக்கள் ஏற்படும். அவை முகத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு தாடை பகுதியில் முகப்பரு வருவது பல்பையுரு கருப்பை நோய்க்குறியின் அறிகுறி திகழ்கிறது.

7 கழுத்து பகுதியில் கருவளையம்

சிலருக்கு கழுத்து பகுதியை சுற்றிலும் கருப்பாக இருக்கும். இதை பெண்கள் அணியும் நகையின் காரணமாக ஏற்படுகிறது என நினைக்கிறார்கள். அதுவும் காரணமாக இருந்தாலும், இது இரண்டாம் வகை நீரிழிவு நோயின் அறிகுறி என்று சொல்லப்படுகிறது. சரியாக கழுத்து பகுதியில் தேய்த்து குளிக்காமல் இருந்தாலும் கூட, அழுக்கு அதிகம் படிவதாலும் ஏற்படலாம்.

8 நரம்புகள் புடைத்தல்

முகத்தில் அளவிற்கு அதிகமாக நரம்புகள் புடைத்தது போல தோற்றமளித்தால், அளவுக்கு அதிகமாக மது அருந்தி வருகிறீர்கள் என்று பொருள். அவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். 

Leave a Reply

%d bloggers like this: