கணவன் மனைவியின் முட்டாள் தனமான 6 சண்டைகள்..!!

காதலித்து கரம் பிடித்த தம்பதிகளானாலும் சரி, வீட்டில் பார்த்து மணந்து கொண்ட தம்பதிகளானாலும் சரி சண்டை சச்சரவு இல்லாமல் சில காலம் மட்டுமே இருப்பார்கள். அந்த சிறிது காலத்திற்கு பின் அவர்களின் சண்டைகள் எண்ணில் அடங்காததாய் இருக்கும். சில சமயத்தில் காரணங்கள் இல்லாமலும் முட்டாள் தனமாக சில வாக்குவாதங்கள் நடக்கும். ஆனால் இந்த தகுதியற்ற விஷயங்களால் ஏற்படும் பிரச்சனைகள் பூதாகரமாக மாறி பெரிய யுத்தத்தில் கொண்டு போய் விடும். இங்கு அது போல் முட்டாள் தனமாக தம்பதிகள் சண்டை போடும் 6 விஷயங்களை பார்க்கலாம்.  

1 வித்தியாசமான தேவைகள்

நீங்கள் இருவருமே மனிதர்கள் தான், இருவரின் தேவைகளும் வித்தியாசமானதாக இருக்கும். நீங்கள் வெளியே போக விரும்பு போது, உங்கள் துணைக்கு வெளியே வர விருப்பம் இல்லாமல் போகலாம். உங்கள் துணை வெளியே செல்ல விரும்பும் போது, நீங்கள் வேறு எதையாவது விரும்பலாம். இது தான் நீங்கள் சண்டை இடுவதற்கு முதல் காரணமாய் அமையும். ஒருவரை மாற்றி ஒருவர் விமர்சனங்கள் செய்ய துவங்குவீர்கள். இது பெரிய வாக்குவாதத்தில் போய் முடியும். இதை தவிர்க்க சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விட்டு கொடுத்து செல்வது சிறந்தது.

2 சமூக ஊடக போர்

சமூக ஊடகங்கள் இப்போது அனைவரின் வாழ்விலும் முக்கிய அங்கமாக திகழ்கின்றன. இதில் இருக்கும் தகவல்கள் அவர்களின் வாழ்க்கையின் வினையாய் வந்து விடுகின்றன. அதாவது, நீங்கள் இதில் செய்யும் எந்த ஒரு செயலும், சில வினாடிகளில் உங்கள் துணையையும் சேர்த்து உலகிற்கே காட்டப்படுகின்றன. இதில் வரும் முதல் கேள்வி யார் அந்த நபர்? இதில் ஆரம்பித்து நம்பிக்கை பிரச்சனையை ஏற்படுத்திவிடுகின்றன.

3 கற்பனைகள்

நீங்கள் ஏதேனும் ஒரு விதமாக சிந்தித்து கொண்டிருந்திருப்பீர்கள். அதை வைத்து உங்கள் துணையின் நேர்மை மற்றும் கடமைகளை ஒரு பைத்தியத்தை போல் கண்காணிக்க துவங்குவீர்கள். இதை அவர்களிடம் கேட்கும் போது, உடனடியாக பதில் சொல்லவில்லை என்றாலும், நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்றாலும், வாதாட துவங்கிவிடுவார்கள். உங்கள் முட்டாள் தனமான கற்பனைகளை வைத்து கொண்டு, நீங்கள் அவர்களுடன் வாதத்தை துவங்குவது முறையல்ல. அவற்றை பற்றி பொறுமையாக நிதானமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

4 வெவ்வேறு பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள்

உங்களுக்கு பிடித்த ஒரு நிகழ்ச்சி உங்கள் துணைக்கு பிடிக்காமல், வேறு ஒன்றை விரும்பி பார்க்கும் போது, அடுத்த சண்டை துவங்கும். அவர்களது விருப்பங்கள் மற்றும் ஆர்வங்கள் வேறுபடும் போது, பிரச்சனைகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான், ஆனால் அந்த தருணத்தில் அவரவர் மகிழ்ச்சியை மட்டும் பார்க்காமல் கொஞ்சம் விட்டு கொடுத்து செல்வது சிறந்தது.

5 அவர்களின் கடந்த காலம்

உங்கள் துணை திருமணத்தின் முன் யாரையாவது விரும்பி பழகி இருக்கலாம். அது உங்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் இருந்திருக்கலாம். இப்போது அது உங்களுக்கு தெரிய வரும் போது நீங்கள் அதை வைத்து துவங்குவதே அடுத்த பிரச்சனை. அவர்கள் கடந்த கால வாழ்வை பற்றி பேசி உங்கள் நிகழ்காலத்தை நரமாக்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். கடந்த காலத்தை பற்றி மறந்து, தற்போதைய வாழ்வை மகிழ்ச்சியாக வாழுங்கள்.

6 முக்கியமான நாள் அல்லது நிகழ்வுகளை மறத்தல்

நீங்களும் உங்கள் துணையுடன் இயந்திரமயமான வாழ்க்கையில் இயங்கி கொண்டிருக்கும் போது, ஏதேனும் ஒரு முக்கியமான நாளையோ அல்லது நிகழ்வையோ நினைவில் கொள்ளவில்லை என்றால் ஆம்பிக்கும் பிரச்சனை தான் இது. அதிலும் குறிப்பாக பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை மறந்தால் கதை முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதை பெரிது படுத்தாமல் விட்டு கொடுத்து சென்றால், இந்த சண்டையை தவிர்க்கலாம். நீங்கள் மறந்து விடுவீர்கள் என்றால், குறிப்புகள் எடுத்துவைத்து கொள்ளுங்கள். 

Leave a Reply

%d bloggers like this: