கணவரிடம் சொல்லக்கூடாத விஷயம் அறிவீரா..?

திருமணம் என்பது இரு வேறுபட்ட மனங்கள், குடும்பங்கள் இணையும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது ஒவ்வொருவரின் வாழ்விலும் நடக்கும், வாழ்க்கையை மாற்றும் நிகழ்வாகும். இந்த பந்தத்தில், இணையும் பெண்களே! உங்கள் கணவரிடம் நீங்கள், ஊன்கள் வாழ்வின் நிகழ்வுகளை, உங்கள் உணர்வுகளை, எண்ணங்களை என அனைத்தையும் பகிர்ந்து கொள்வீர்கள். ஆனால், நீங்கள் உங்கள் கணவரிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் சில உள்ளன. அவற்றைப் பற்றி இப்பதிப்பில், படித்தறிவோம்…  

1. “உங்கள் அன்னை..”

மாமியார்-மருமகள் சண்டை, இருவரும் தவறாக புரிந்து கொள்ளுதல் என்பது எங்கும் நடக்கும் சாதாரண நிகழ்வே! ஏனெனில், தான் பெற்று, வளர்த்து, முழு உரிமையோடு, அன்பு மனதோடு சேவைகள் செய்து வளர்த்த பிள்ளையின் வாழ்வில், திடீரென அனைத்தையும் இன்னொருவருக்கு அளித்து, தள்ளி நிற்க வேண்டும்-என்ற நிலை வரும் போது இந்த தவறான புரிதல், சண்டை இவையெல்லாம் ஏற்படுகின்றன. 

ஆகையால், பெண்களே! உங்கள் கணவரின் தாயை உங்கள் தாயை நினைக்கத் தொடங்குங்கள். அவரைப்பற்றி, எப்பொழுதும் உங்கள் கணவரிடம் குறை கூறாதீர்; ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் நீங்களே சமாளிக்க, பிரச்னையை சரிசெய்ய முயலுங்கள். எந்தவொரு மகனும், மகளும் தங்கள் தாயைப் பற்றி, தவறாய் பேசுவதை, குறை கேட்பதை விரும்ப மாட்டார்கள் என்ற உண்மையை உணருங்கள்..

2. “உங்களுக்கு இதுகூட தெரியாதா..?”

உங்களுக்கு என்று ஒரு குழந்தை உருவாகும் போது, அதனை வளர்க்கும் செயல்களில், உங்கள் கணவரும், உங்கள் அளவிற்கு அனைத்தையும் சரியாக செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. குழந்தைக்கு டையப்பர் மாற்றுவது, அதனைக் குளிப்பாட்டுவது என்பதெல்லாம், ஒரு ஆண் மகனுக்கு புதிதான ஒன்று; பெண்களுக்கு இந்த மாதிரியான செயல்களெல்லாம், இயற்கையாகவே தெரிந்திருக்கும். ஆகையால், சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம்..,“உங்களுக்கு இதுகூட தெரியாதா..?” என்று கேட்பதை தவிருங்கள்…!

3. “நான் என் அன்னையின் வீட்டிற்கு செல்கிறேன்..”

உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் ஏதேனும் சண்டையோ, வாக்குவாதமோ, மனஸ்தாபமோ நேரிட்டால், உடனே “நான் என் அன்னையின் வீட்டிற்கு செல்கிறேன்..” என்று கூறுவதைத் தவிர்த்து, பிரச்னையை, அவருடன் பேசி சரி செய்ய முயற்சியுங்கள்.

4. “உங்களுக்கு என்னைப்பற்றிய கவலையேயில்லை..!”

உங்கள் கணவர், அவர் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் சமயங்களில், அவர் உங்கள் பிறந்த நாளையோ, உங்கள் திருமண நாளையோ மறந்து, உங்களுக்கு பரிசு தர மறக்கும் போதோ,’ உங்களை வெளியில் அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறி, அது நடக்காமல் போகும் போதோ, அவரிடம், “உங்களுக்கு என்னைப்பற்றிய கவலையேயில்லை..!” என்று குற்றம் பாராட்டாதீர்கள்; நிலைமையை புரிந்து கொண்டு, அதற்கேற்ற மாதிரி செயல்படும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்…!!

5. “வாழ்க்கை எப்பொழுதும் போல் இல்லை..”

உங்களுக்கு என்று ஒரு வாரிசு வந்தவுடன், உங்கள் வாழ்க்கையும், உங்களுக்கும் கணவருக்கும் இடையேயான உறவிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். இம்மாற்றங்களால், “வாழ்க்கை எப்பொழுதும் போல் இல்லை..” என்று குறை கூறாதீர்; குழந்தையை உங்கள் தாய், அல்லது கணவரின் தாய் போன்ற எவரிடமாவது பார்த்துக்கொள்ளுமாறு கூறி, உங்கள் கணவருடன் சிறிது நேரம் செலவிடுங்கள்…!

6. “எங்கே போய் தொலைந்தீர்கள்..?”

ஏதேனும் விசேஷங்களின் போதோ அல்லது வெளியில் சென்றிருக்கும் போதோ, உங்கள் கணவர் எங்கேனும் சென்று, வர தாமதமாகினால், “எங்கே போய் தொலைந்தீர்கள்..?” என்று கத்தாதீர்கள்; அவருக்கு ஏதேனும் முக்கிய வேலை ஏற்பட்டிருக்கும்; அதனாலேயே தாமதமாய் வந்திருப்பார். 

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: