குழந்தைகளின் கண்பார்வையை அதிகரிக்க அருமையான 5 வழிகள்..!

நமது தாத்தா பாட்டி காலத்தில் கண்பார்வை குறைபாடு என்பது வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒன்றாக இருந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்படுவது சாதாரணமான ஒன்றாக இருக்கிறது. உங்கள் குழந்தைக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டிருந்தால், அதை நினைத்து கவலையடைகிறீர்களா? இப்போதைக்கு கண்ணாடி அணிந்திருந்தாலும், அதற்கான நிரந்தர தீர்வை பெற்றிட முடியும். இங்கு குழந்தைகளின் கண்பார்வையை அதிகரிக்க செய்யும் 5 வழிகளை பார்க்கலாம். 

1 பயிற்சிகள்

இங்கு குழந்தைகளின் கண் பார்வையை மேம்படுத்த சில எளிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் கண்களை சுழற்ற சொல்லுங்கள்(நீங்கள் அறிவுரை கூறும் போது செய்வார்களே அப்படி). முதலில் இடமிருந்து வலமாகவும், பின் வலமிருந்து இடமாகவும் சுழற்ற வேண்டும்.

20 முதல் 30 முறை ஒளிரும் வகையில் கண் இமைகளை சிமிட்டுவதன் மூலம் கண்பார்வையை அதிகரிக்கலாம், குறிப்பாக உங்கள் பிள்ளை அதிக நேரம் கணினி அல்லது டிவி பார்த்து கொண்டிருப்பவர்களானால் இந்த பயிற்சி நல்ல பலனை தரும்.

வேறுபட்ட தூரங்களுக்கு பார்வையை உடனுக்குடன் மாற்றுவதன் மூலமும் அதிகரிக்கலாம். உங்கள் குழந்தையை ஒரு விரலையோ அல்லது ஒரு பென்சிலையோ பிடித்து ஒரு சுவரில் இருந்து பத்து அடி தூரத்தில் நிற்க வைக்கவும். பின் பென்சில் மீது கவனம் செலுத்த வைத்து, பின்பு சுவரில் உள்ள வேறு எதாவது பொருளின் மீது சென்று மீண்டும் பென்சிலுக்கு வரசெய்யவும். 10 நிமிடங்கள் இதை தொடர்ந்து செய்யவும். நீங்கள் இதை வேறு தூரத்தோடும் முயற்சி செய்யலாம்.

இதே போல் படங்களை காண்பித்து அதில் உள்ளவற்றை மனதில் பதியவைத்து கொண்டு மீண்டும் நினைவுகூறும் விளையாட்டை விளையாடுவதன் மூலமும் அதிகரிக்கலாம்.

2 உணவுகள்

கண்பார்வைக்கு தேவையான உணவுகளை உண்ணுவது பார்வைத்திறனை அதிகமாக்க மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். பச்சைக்காய்கறிகள் அதாவது கீரை, ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், இவற்றில் கால்சியம், வைட்டமின் ஏ, பி மற்றும் சி12 போன்றவை நிறைந்துள்ளன.

பிற காய்கறிகளான கேரட், குடைமிளகாய் போன்றவையும் முட்டை மற்றும் நுட்ஸ் வகைகளான முந்திரி, பாதம் போன்றவையும் பார்வைத்திறனை அதிகரிக்கும். இவற்றை உங்கள் குழந்தைகளின் தினசரி உணவில் சாலடாகவோ அல்லது ஜூஸாகவோ கொடுக்கவும்.

மீன்களில் அதிகளவு ஒமேகா 3 அமிலங்கள் உள்ளன. எனவே அடிக்கடி மீனை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

3 வெளியில் அழைத்துசெல்லுதல்

உங்கள் குழந்தை அதிக நேரம் வீட்டிலேயே இருக்கும்போது அவர்கள் தொலைக்காட்சியையோ அல்லது கணினியையோ அதிக நேரம் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். இது அவர்களின் பார்வைத்திறனை பாதிப்பதோடு அதன் முன்னேற்றத்தையும் தடைசெய்யும். தினமும் நடைப்பயிற்சிக்கு வெளியில் அழைத்து செல்லுங்கள். இயற்கை ஒளியும், பசுமையான காட்சிகளும் அவர்கள் கண்பார்வையில் அதிசயத்தை ஏற்படுத்துவதோடு கிட்டப்பார்வை ஏற்படுவதையும் தடுக்கும்.

4 கண்ணாடியை கழட்டிவைத்தல்

ஒருவேளை உங்கள் குழந்தை கண்ணாடி அணிபவர்களாயின் தினமும் சில நிமிடங்கள் கண்ணாடியை கழட்டிவைக்க அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவர்கள் கண்களின் தசைகள் இப்போது சிறிது ஓய்வுநிலையில் இருக்கும் ஏனெனில் நீங்கள் கண்ணாடியின் மையத்தை உற்று நோக்கவேண்டிய அவசியம் இல்லை. இதனை தினசரி செய்யும் செயல்களான பல் துலக்குதல், உணவு உண்ணுதல் இன்னும் அவர்கள் வசதியாய் உணர்வர்களாயின் நடைப்பயிற்சியின் போது கூட செய்யலாம்.

5 பரிசோதித்தல்

உங்கள் குழந்தைக்கு பார்வைக்குறைபாடு இல்லையென்றாலும் அடிக்கடி அவர்களின் கண்களை பரிசோதிப்பது அவசியமாகும். இப்போதெல்லாம் பள்ளிகூடங்களிலே கண்பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.

உங்கள் குழந்தை ஏற்கனவே கண்ணாடி அணிய பரிந்துரைக்க பட்டிருந்தாலும், இந்த முறைகளை பயன்படுத்தி அவர்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்யலாம். ஒவ்வொரு 6 மாதத்திற்கும் உங்கள் குழந்தையின் கண்களை பரிசோதிக்க மறந்துவிடாதீர்கள். 

Leave a Reply

%d bloggers like this: