குழந்தைகளுக்கு எப்பொழுதெல்லாம் மசாஜ் செய்யலாம்..?

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் முறைகள் பற்றி கட்டாயம் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மசாஜினை குழந்தைகளுக்கு அடிக்கடி செய்வதன் மூலம், அவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும், சிறந்த இரத்த ஓட்டத்தையும் பெறுவர். ஆகையால் குழந்தைகளுக்கு எப்பொழுதெல்லாம் மசாஜ் செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்..!  

குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.

குழந்தைகள் உங்கள் பாசத்தை புரிந்து கொள்ள மசாஜ் செய்வது ஒரு காரணியாக அமைகிறது. குழந்தைகள் அன்பினை புரிந்து கொள்வதுடன் அவர்களின் தொடு உணர்வு மேம்பாடடைகிறது. குழந்தைகள் உறக்கமின்றி அழும் போதோ, உடல் நிலை சரியில்லாமல் அழும் போதோ நீங்கள் அளிக்கும் பாசம் கலந்த மசாஜ், பயந்து போயிருந்த குழந்தைகளுக்கு ஒருவித நிம்மதியை அளிக்கும்..

மேலும் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது, குழந்தைகளின் தோல், வறண்டு போகாமல் நல்ல ஈரத்தன்மையை பெறுகிறது. குழந்தையின் சருமம் பொலிவு பெறுகிறது. 

குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் போது, அவர்களின் உடலில் வீக்கங்கள், தடுப்புகள் போன்று ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் எளிதில் கண்டறியலாம். தினமும் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவது குழந்தைக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவால் வேறு சில நன்மைகளும் உண்டு.

உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பற்கள் வளரும்போது வலி அதிகமாகாமல் இருத்தல் என பல நன்மைகள் உண்டு. குழந்தைக்கு ஆரம்ப காலத்திலேயே மசாஜ் செய்து வந்தால், மஞ்சள் காமாலை வராமல் தடுக்க முடியும்.

தூங்கி எழுந்தவுடன் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வது கூடாது. குழந்தை விழித்திருக்கும் போது, நன்கு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.

மசாஜ் செய்வதை குழந்தைகள் அனுபவிக்க ஆரம்பித்துவிடும். ஒருவேளை மசாஜ் செய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தை அழ ஆரம்பித்தால் அதற்கு மசாஜ் செய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: