தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும் ஆயுர்வேத இரகசியம்!

இந்தியாவில் பெரும்பான்மையான பெண்கள் தாய்ப்பால் பற்றாக்குறையால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை 6 மாதத்திற்கு முன்னர் கூட நிறுத்தி விடுகிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் இந்த தாய்ப்பால் பற்றாக்குறைக்கு என்ன தீர்வு என்பது பற்றி செய்த ஆராய்ச்சியில் கீழ்கண்ட இரண்டு ஆயுர்வேத பொருட்கள், ஒரு சிறந்த தீர்வாக அமையும் என கண்டறியப்பட்டுள்ளது. அவை என்னவென்று இந்த பதிப்பில் படித்து அறியலாம்..!   

வெந்தயம்..!

தாய்ப்பால் சுரப்பு குறித்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில், வெந்தய பவுடர் கலந்த தேநீரை பருகிய பெண்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.

வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் நன்றாக ஊற வைத்து, காலையில் அந்த வெந்தய தண்ணீரை குடித்து வந்தால், தாய்ப்பால் அதிகரிக்கும். வெந்தயத்தை காய்ச்சிய தண்ணீரில் இட்டு, சிறிது நேரம் கழித்து வெந்தயத்தை வடிகட்டிவிட வேண்டும். இந்த தேநீரை பருகினாலும் தாய்ப்பால் அதிகரிக்கும்.

பேக்கரிகள் மற்றும் கடைகளில் வெந்தயம் சிறு தீனியாகக் கூட நல்ல சுவையுடன் கிடைக்கிறது. இதனையும் பெண்கள் சாப்பிடலாம்.

முருங்கை பூ..!

நமது வீடுகளில் வளர்க்கும் முருங்கை அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்குகிறது. முருங்கை காய் மற்றும் முருங்கை கீரை ஆகியவை உடலுக்கு உரம் அளித்து நீண்ட ஆயுளை தருகிறது. முருங்கைப்பூ மாத விலக்கை தூண்டக் கூடியது. ஆண்களைப் பொறுத்த அளவில் உயிரணுக்களை அதிகரிக்க செய்யக் கூடியது. ஆண் மலட்டுத் தன்மையை நீக்கக் கூடியது. உடலுக்கு மிகுந்த உரத்தை அளித்து உள் உறுப்புகளை தூண்டக் கூடியதாக செயல்படுகிறது. முருங்கைப்பூவை பயன்படுத்தி கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்த முருங்கைப்பூ குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரப்பதற்கும் பயனுட்டக் கூடியதாக அமைந்துள்ளது.

Leave a Reply

%d bloggers like this: