பிரசவத்திற்குப் பின் மருத்துவரை சந்திக்கத் தூண்டும் 7 அறிகுறிகள்..!!

குழந்தையை பெற்றெடுத்த பின், மருத்துவரின் தயவு, முடிந்தது என்று நினைத்தால், அது தவறு.! ஏனெனில், இனிதான் மருத்துவரின் தேவை, அதிகம் தேவை. குழந்தையை நோய்த்தொற்றுகள் அணுகாமல், நலமாக வளர்க்க மற்றும் நீங்கள் உடல் ஆரோக்கியம் பெற மருத்துவரின் சேவை அவசியம் தேவை. ஆகையால், மருத்துவரை கட்டாயம் கலந்தாலோசிக்க வேண்டிய அந்த 7 விஷயங்களை, அவற்றின் அறிகுறிகளைப் பற்றி இப்பதிப்பில் காணலாம்…!!  

1. அதீத காய்ச்சல்..

100 பாரன்ஹீட்டிற்கு அதிகமான காய்ச்சல், வயிறு மற்றும் தலை வலியுடன் காணப்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும். இவ்வகை காய்ச்சல், பிறப்புறுப்பு தொற்று மற்றும் சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்ததால், உடலில் ஏற்படும் ஒவ்வாமை போன்றவை காய்ச்சலை ஏற்படுத்தலாம். இதனை அலட்சியம் செய்யாமல், பிறப்புறுப்பு மற்றும் சிசேரியன் அறுவை சிகிச்சை நடந்த இடங்களை, அவை நலம் பெறும் வரை கண்காணித்து கவனம் செலுத்துவதும், பிறப்புறுப்பில் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.

2. மூச்சு வாங்கல்..

வழக்கமான செயல்களை புரியும் போதோ அல்லது மாடிப்படிகள் ஏறி இறங்கும் போதோ அதிகப்படியான, மூச்சு வாங்கல் ஏற்பட்டால், மருத்துவரை சந்திப்பது நல்லது. ஏனெனில், இது நுரையீரலின் இரத்தக் குழாயில் ஏதேனும் முடிச்சு விழுவதால், நுரையீரல் தொற்றால் ஏற்படலாம்.

3. நெஞ்சு வலி

கர்ப்பகால நெஞ்சுவலி வேறு, அது பாதிப்பை ஏற்படுத்தாது. மகப்பேற்றுக்குப் பின் ஏற்படும் நெஞ்சுவலி, நுரையீரல் தொற்றால் ஏற்படுவது. இந்த வலியுடன், அதீத மூச்சுவாங்கல், இருமும் பொழுது இரத்தம் வெளிப்படல் போன்றவை தோன்றினால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

4. தலைவலி..

கர்ப்பகால தலைவலி, அனைவருக்கும் ஏற்படக்கூடியதே! ஆனால், பிரசவத்திற்குப் பின் தலைவலி ஏற்பட்டால், அதனுடன், குமட்டல், வாந்தி, தலை சுற்றல், மங்கிய பார்வை ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

5. அதிகப்படியான இரத்தப்போக்கு

பிரவத்திற்குப் பின் இரத்தப் போக்கு நிகழ்வது சாதாரண நிகழ்வே! ஆனால், அது அதிகமாகத் தொடங்கினால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

6. பிறப்புறுப்பு வலி..

பிரசவத்தின் போது, பல அறுவை சிகிச்சைகள் உங்கள் பிறப்புறுப்பில் நிகழ்ந்திருக்கும். அக்காரணங்களால், அங்கு அரிப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்; பிறப்புறுப்பு வீங்கி சிவந்து காணப்பட்டால், அதீத அரிப்பு ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

7. உணர்வுகளில் மாற்றங்கள்..!

பிரசவத்தால், உங்கள் மன நிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். அதாவது, தூக்கமின்மை, கவலை, கிளர்ச்சி, பிரமைகள், வலிகள், குழப்பங்கள் போன்ற உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படலாம். இம்மாற்றங்கள் மிகுதியடைந்தால், நீங்கள் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.  

பதிப்பைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு நன்றி!!! உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கும் விதமாக நீங்கள் ஆன்லைனில், அமேசானில் வாங்கும் பொருட்களுக்கு 5% பணவிலக்கு அளிக்கிறோம்..! அதற்கு இந்த link-ஐ உபயோகப்படுத்தவும்..! அமேசானில் பொருட்கள் வாங்க பயன்படுத்த வேண்டிய link: http://bit.ly/2lLVpTJ

Leave a Reply

%d bloggers like this: