புதுத்தோற்றத்துடன் விளங்க:மேற்கொள்ள வேண்டிய தோல் பராமரிப்பு பழக்கங்கள்..

நாம் எவ்வளவு தான் படித்திருந்தாலும், அறிவாளியாக விளங்கினாலும், நம்முடைய தோற்றமும் நம்முடைய ஆடைகளும் தான் நம்மைப் பற்றிய எண்ணத்தை மற்றவர் மனதில் விதைக்கிறது. ஆடைகளை நாம் பார்த்து பார்த்து, நாம் இருக்கும் இடத்திற்கேற்ப வாங்கி அணிந்து மகிழ்ந்திடுவோம்; மதிப்பை மேம்படுத்துவோம். ஆனால், அவசரமாக சென்று கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில், நாம் மறக்கும் ஒரே விஷயம் நம்மை கவனித்துக் கொள்வது தான். நம் தோற்றம் அழகானதாக, சரியானதாக இருக்கும் பொழுது, நம்முளுள்ள தன்னம்பிக்கை மேம்படும்.  

ஆகையால், நம்மைக் கவனித்து, நம் புறத்தோற்றத்தை மேம்படுத்த சில வழிகளும் குறிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன..!

1. நேரம் வகுத்து, அதை பின்பற்றுங்கள்..!

உங்களின் சராசரி வாழ்வில், உங்களைக் கவனிக்க என்று சிறிது நேரம் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் தோலின் தன்மைக்கேற்ற, ஒவ்வாமை ஏற்படுத்தாத அழகு சாதனப் பொருட்களை வாங்கியோ அல்லது வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரித்தோ தினமும் பயன்படுத்தி, அழகு மிளிரும் சருமம் பெறுங்கள்.

2. சூரிய ஒளி/ஈரத்தன்மை

சூரிய ஒளியால், ஏற்படும் வெப்பம் சருமத்தைத் தாக்கி, வறண்டு போகச் செய்து விடும். அச்சமயங்களில், வெப்பத்தைத் தாங்கி, மேனியழகை பராமரிக்கும் அழகு சாதனப் பொருட்களையும், சருமத்தை வறண்டு போகாமல் ஈரத்தன்மை காக்கும் அழகு சாதனப் பொருட்களையும் தினமும் பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.

3. தூங்கச்செல்லுமுன் தூய்மையாகுங்கள்..!

நீங்கள் நாள் முழுதும் அணிந்து கொண்ட, அழகு சாதனப் பொருட்கள் அனைத்தையும், தூங்கச் செல்லுமுன் நீக்கி விடுவது நல்லது. அதாவது, உடலைத் தூய்மைப்படுத்தி விடுங்கள் அல்லது நீராடி விடுங்கள். இவ்வாறு செய்வது, உங்கள் சருமத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என அறியவும், ஒருவிதமான புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

4. தினமும் தேவை தளர்த்தி..

நீங்கள் தினமும் பயன்டுத்தும் அழகு சாதனப் பொருட்களில் சில, அழகுப் பொலிவைத் தர, உங்கள் சருமத்தை இறுக்கிப் பிடித்திருக்க நேரிடலாம்; அச்சமயங்களில், உங்கள் இயற்கையான அல்லது சந்தைகளில் கிடைக்கும் தளர்த்தி (Exfoliate) வகை பொருட்களைப் பயன்படுத்தி, இறுக்கமான சருமப் பகுதிகளை தளர்த்தி, புத்துணர்வு அடையச் செய்யலாம்.

5. தினசரி உடற்பயிற்சி

தினசரி, உடலழகை மற்றும் தோற்றத்தை மேம்படுத்துவதற்குரிய யோகப் பயிற்சிகளையும், சில உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வது நல்லது. இவ்வாறு தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதால், உடலும் மனமும் நலம் பெரும்; தோற்றமும் பொலிவு பெரும்.

Leave a Reply

%d bloggers like this: