பெண்களே! இந்த உணவு பற்றி அறிவீரா..?

தோழிகளே! நீங்கள் எத்தனையோ விதவிதமான சமையல்களை செய்து குடும்பத்தினரை அசத்தியிருப்பீர். வாழைக்காய் மற்றும் பூவினை பயன்படுத்தி எண்ணற்ற விதத்தில் கூட்டு செய்திருப்பீர். ஆனால் அதன் மருத்துவப் பயன் தெரிந்திருந்தும், அதனுடைய சுவை பிடிக்காததால் பெரும்பாலான பெண்கள் அதை உணவில் ஒதுக்கி வைத்துவிடுவீர். இப்படி ஒதுக்கும் தோழிகளே! நீங்கள் அறிவீர்களா வாழைப்பூவின் மருத்துவ பயனை? வாழைப்பூவினை வைத்து எப்படி அனைவரும் விரும்பும் வண்ணம் சமைப்பது என்று படித்தறிய பதிப்பிற்குள் செல்வோமா?? 

வாழைப்பூவின் துவர்ப்பு சுவை தெரியாமல், சுவையான வாழைப்பூ வடகம் தயாரிப்பது பற்றி அறியலாம், வாருங்கள்..!

தேவையானவை:

வாழைப்பூ – 4 மடல்கள், உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி, கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி, மஞ்சள்தூள் – 2 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாழைப்பூவில் உள்ள கள்ளனை ஆய்ந்து, பொடியாக நறுக்கி மோரில் போட்டு வைக்கவும். (இது வாழைப்பூ கருப்பதைத் தவிர்க்கும்). பருப்பு வகைகளை ஊறவைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றவும். மிகவும் மையாக அரைக்கத் தேவை இல்லை. கடைசியாக வாழைப்பூவைப் பிழிந்து எடுத்து, இந்தக் கலவையுடன் சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதை, சிறு சிறு உருண்டைகளாகக் கிள்ளியோ, சிறிய அடையாகத் தட்டியோ வெயிலில் நன்கு உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இந்த வடகத்தை, எண்ணெயில் வறுத்துப் பயன்படுத்தலாம். காரக்குழம்புக்கு வறுத்தும் சேர்க்கலாம்.

பலன்கள்:

மாதவிடாய்க் காலங்களில் அதிக ரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்கும்.

அதிக ரத்தப்போக்கை (அது மூலமாக இருந்தால்கூட) நிறுத்த வல்லது.

பெண்களுக்கு அதிக நன்மையை அள்ளித்தரும் வாழைப்பூ வடகம் செய்வது பற்றி படித்தறிந்தோம்..! இனி இதை வீட்டிலே செய்து அசத்துங்கள் பெண்களே!!

Leave a Reply

%d bloggers like this: