உறக்கம் மற்றும் கனவுகள் பற்றிய 4 உண்மைகள்..!

நிம்மதியான உறக்கத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது. ஒருவரது உறக்கம் பாதிக்கப்பட்டால், உடலின் ஆரோக்கியம், உடல் உறுப்புகளின் செயற்திறன் என அனைத்தும் பாதிக்கப்படும். உடல்நலம் மட்டுமல்ல, மன நலமும் தான். சரியாக உறங்காமல், ஓரிரு மாதங்கள் வேலை செய்தால் நிச்சயம் உங்களுக்கு மனநல பாதிப்புகள் உண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன. உறக்கம் என்பது எல்லா உயிர்களுக்கும் அத்தியாவசியம். ஆனால், மனிதர்கள் கடினமாக வேலை செய்கிறேன் என்ற பெயரில் உறக்கத்தை தொலைத்து வருகிறார்கள்…! அப்படி நாம் தொலைக்கும் உறக்கத்தை பற்றிய நிதர்சனமான உண்மைகளை பதிப்பில் படித்து அறிவோம்..!  

பூனை தூக்கம்!

கேட் நேப் எனப்படுவது பூனை உறக்கம் என்பதாகும். அதாவது கண்களை திறந்துக் கொண்டே தூங்குவது. இது மனிதர்கள் மத்தியிலும் இருக்கிறது. இப்படி தூங்குவதை மனிதர்களே அறிய மாட்டார்கள். எங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அப்படியே உறங்கிஇருப்பீர்கள். அதில் இருந்து வெளிவந்த பிறகு தான், உறங்கியதை உணர்ந்திருப்பீர்கள்.

கனவு!

உறக்கத்தின் ஆழ்ந்த நிலையான ரேபிட் ஐ மூவ்மென்ட் என்ற ஸ்டேஜில் தான் கனவுகள் வரும். பெரும்பாலான கனவுகள் பொருளற்றதாக தான் இருக்கும். இதற்கு காரணம், கனவு என்பது உங்கள் ஆழ்மனதில் தேங்கிக்கிடக்கும் எண்ணங்கள், ஆசைகள், அந்நாளில் நடந்த, நீங்கள் கடந்து வந்த சூழல் மற்றும் நிகழ்வுகளின் கலப்பு. ஆகையால்,ஏதேனும் கனவு வந்தால், அதை எண்ணி, எண்ணி குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறட்டை!

குறட்டை விடாத மனிதர்களே இருக்க முடியாது. ஏன், விலங்குகள் கூட குறட்டைவிடும். பலரது குறட்டை மிக குறைவான சப்தத்துடன் இருக்கும். இதனால், அவர்கள் குறட்டை விடுவதை நாம் அறிய முடியாது. இதை மைல்ட் ஸ்நோரிங் என கூறுகிறார்கள்.

உறக்க சுழற்சி!

விலங்குகளும் கனவு காணுமா என்பதை நாம் அறிந்ததில்லை. ஆனால், மனிதனை போலவே மற்ற உயிரினங்களுக்கும் உறக்க சுழற்சி இருக்கிறது. யானைகள் நின்று கொண்டும், அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் குணாதிசயம் கொண்டுள்ளது. மனிதர்கள் தங்கள் அன்றாட செயல்கள், ஆரோக்கியமான உறக்க சுழற்சியை கெடுக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்…!

உங்கள் உறக்கம் மற்றும் கனவுகள் எத்தகையது என comment ல் தெரிவியுங்கள் நண்பர்களே..!

Leave a Reply

%d bloggers like this: