குழந்தைகளால் வாழ்வில் ஏற்பட போகும் அதிர்ச்சியான 6 மாற்றங்கள்…

மாற்றங்கள் என்றுமே சுவாரஸ்யமானவைதான், அதிலும் உங்களுடைய சிறிய குழந்தை வீட்டிற்குள் நுழையும்போது நீங்கள் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். பெண்கள் நன்கு அறிவார்கள் குழந்தை பிறந்த பிறகு அவர்கள் உடல் முன்னர்போல் இருக்காது என்று, ஆனால் அவர்கள் அறியமாட்டார்கள், குழந்தையின் வருகையால் அவர்கள் வாழ்க்கையின் அனைத்துமே மாற்றம் அடையப்போகிறதென்று. பெற்றோர்களே தயாராகுங்கள் உங்கள் வாழ்க்கையில் புயல் ஆரம்பிக்க போகிறது. குழந்தை வந்த பிறகு நடக்கப்போகும் நீங்கள் எதிர்பார்க்காத மாற்றங்கள் இங்கே தரப்பட்டுள்ளது.  

1 தாம்பத்தியம்

அனைவரும் அறிவார்கள் குழந்தை பிறந்த 6 வாரத்திற்கு அவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது. ஆனால் நீங்கள் அறியாதது என்னவென்றால் 6 வாரத்திற்கு பிறகும் உங்கள் தாம்பத்தியம் முன்போல் இருக்காது. ஏனெனில் இப்போது பல வேலைகள் உங்கள் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும். அது மட்டுமின்றி உங்களுக்கும் தம்பதியதில் ஆர்வம் குறைந்திருக்கும்.

2 உறவு நிலை மாற்றம்

குழந்தை பிறந்த பிறகு உங்களின் அனைத்து நியாபகங்களும் குழந்தையை சுற்றியே இருக்கும். உங்கள் துணையை பற்றி சிந்திக்கக்கூட நேரம் இருக்காது. உங்கள் இருவருக்கும் இடையேயான உறவு உங்கள் குழந்தையுடன் உள்ள தொடர்பாக மாறிவிடுகிறது. ஆனால் இது ஒன்றும் தீங்கானது அல்ல. இது ஒரு சாதாரண உறவுநிலை மாற்றமாகும்.

3 சண்டைகள் அதிகரித்தல்

இந்த சந்தர்ப்பத்தில் பெண்கள் அனைத்து விஷயங்களுக்கும் கோபப்படுவார்கள். இதற்கு காரணம் ஹார்மோன் மாற்றமாகும் அது மட்டுமின்றி அவர்கள் பொறுமை குறைந்ததுமாகும். நாள் முழுவதும் நீங்கள் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் மேலும் மற்ற வேலைகளை பார்க்க வேண்டும். அமைதியாயிருங்கள் எல்லாம் பழைய நிலைக்கு மாறும்.

4 உறவுகள் தூரமாகுதல்

இது ஒரு கசப்பான உண்மையாகும். உங்கள் குழந்தையே உங்கள் உலகம் என்றானதால், உங்கள் கணவருடன் செலவிட நேரம் இன்றி தவிப்பீர்கள். திருமண நேரத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் ஏராளமாய் இருந்திருக்கும். நீங்கள் சில திட்டங்கள் தீட்டி வெளியே சென்றாலும் உங்கள் நினைவுகள் குழந்தையை சுற்றியே இருக்கும்.

5 குழந்தையை அதிகம் நேசித்தல்

அனைவரும் குழந்தையை நேசிப்பார்கள். ஆனால் சிலர் தங்கள் துணையைவிட குழந்தையை அதிகம் நேசிப்பார்கள். அதற்கு காரணம் உங்கள் மணவாழ்க்கையில் ஏற்படும் கசப்பு, உங்கள் கவனம் முழுவதையும் குழந்தை மீது திருப்பிவிடுகிறது. இது உங்கள் மணவாழ்க்கையை கூட பாதிக்கும்.

6 நேரம் மற்றும் ஓய்வின்மை

உங்களுக்கு நீங்கள் விரும்புவதை செய்ய நேரம் கிடைத்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. குழந்தை வைத்திருப்பது என்பது அலுவலக பணி போன்றது அல்ல. பார்க்கும் பொருட்கள் அனைத்தையும் பிடுங்கி விளையாடும் குழந்தையை வைத்துக்கொண்டு நீங்கள் ஷாப்பிங் சென்று பொருட்களை வாங்க வேண்டும். இப்படி பல சிரமங்கள் இருந்தாலும் பின்னாளில் உங்கள் குழந்தையிடம் அவர்களின் குழந்தை பருவத்தை பற்றி சொல்லும்போது இந்த செயல்கள் யாவும் அதிக மகிழ்ச்சி தரக்கூடியதாய் இருக்கும்.

Leave a Reply

%d bloggers like this: