குழந்தைகளின் உடல் எடை குறைவாக இருப்பது பெரும்பாலான பெற்றோர்களின் கவலைகளில் ஒன்றாக இருக்கும். குழந்தைகள் ஆரோக்யமான உணவை உட்கொள்வதில்லை என்பது அவர்களது கருத்து. சில நேரங்களில் குழந்தைகள் உயரம் வளர்ச்சி அடைவதாலும் அவர்களின் உடல் எடை குறைவாக இருக்கும். ஆனால் உடல் எடை குறைவாக இருந்தால், உடல் ஆரோக்கியமும் குறைவாக இருப்பதாக பெரும்பாலான பெற்றோர் கருதுகிறார்கள். அதற்கென பல சத்து மாவு கலவைகளை கடைகளில் வாங்கி கொடுக்கிறார்கள்.
இவை குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை. அவற்றில் உடலுக்கு நன்மை பயக்க கூடியவை ஏதும் இல்லை. அவை எண்ணெய் எடுத்த பின் மீதம் இருக்கும் கழிவுகளில் இருந்து தயாரிக்க படுகின்றன. இதை அறியாமல் நாம் விளம்பரங்களில் வருவதை நம்பி குழந்தைகளுக்கு கொடுத்து வருகிறோம். அதற்கான தீர்வாக குழந்தைகளுக்கு கொடுக்க ஆரோக்கியமான சத்து மாவு தயாரிப்பை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 பாதாம் – 100 கிராம்
2 முந்திரி – 100 கிராம்
3 வாதுமை கொட்டை (வால்நட்ஸ்) – 100 கிராம்
4 பிஸ்தா – 100 கிராம
5 ஏலக்காய் – 10
6 உளுந்து – 200 கிராம்
7 பாசி பயறு – 150 கிராம்
8 ஓட்ஸ் – 150 கிராம்
9. பார்லி – 150 கிராம்
10. எள் – 150 கிராம்
11. கேழ்வரகு மாவு – 500 கிராம்)
12 சோயா மாவு – 200 கிராம்
செய்முறை
வாணலியில் பாசிப்பயறு, உளுந்து, ஓட்ஸ் மற்றும் பார்லியை நல்ல மனம் வரும் வரை தனித்தனியாக வறுக்கவும். மாவுகளை தவிர மற்றவைகளை வாணலியில் பொன்னிறமாக வறுக்கவும். அனைத்தையும் குறைந்தது 3 – 4 நிமிடங்கள் வறுக்கவும். இப்போது இவற்றை ஆற வைக்கவும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸில் நன்கு அரைக்கவும். கட்டிகள் இல்லாமல் நன்கு அரைத்து கொள்ளவும். குறைந்தது 5 முதல் 6 நிமிடங்கள் வரை அரைத்து கொள்ளவும். அது நன்கு அரைப்படவில்லை எனில், மீண்டும் அரைக்கவும். இதை குளிர்சாதன பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கவும்.
இந்த கலவையை சூடான பால் மற்றும் சர்க்கரையுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவை உங்கள் குழந்தைகள் விரும்பி உண்ண கூடியதாகவும், எளிதில் செரிமானமாக கூடியதாகவும் இருக்கும். இதில் நீங்கள் விரும்பினால் சுவைக்கேற்ப சாக்லேட் சேர்த்து கொள்ளலாம். இது கட்டாயம் உங்கள் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும்.