குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை..!

உங்களுக்கு தெரிந்திருக்கும் தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியமானது என்று. உங்கள் குழந்தை பிறக்கும்போதே நோய்எதிர்ப்பு சக்தியுடன்தான் பிறந்திருப்பார்கள். ஆனால் ஆன்டி ஆக்ஸிடென்ட் குறைபாடு காரணமாக அது முழுமை பெற்றிருக்காது. எனவே தான் அம்மாக்கள் குழந்தை பிறந்ததுமே தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் தாய்ப்பாலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.  

தாய்ப்பால் மட்டும் உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை முழுமையாக்க போதாது, தடுப்பூசி போடுவதும் அவசியமாகும். சரியான காலஇடைவெளிகளில் தடுப்பூசி வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் எந்த தடுப்பூசி போடவேண்டும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1 வயது வரம்பு : புதிதாய் பிறந்த குழந்தைகள்

1 பிசிஜி

இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க உதவுகிறது. மேலும் காசநோயிலிருந்து பாதுகாக்கிறது.

விலை: 15-25

2 ஓபிவி

குழந்தைகளிடையே அதிகம் நிலவும் நோய் போலியோ ஆகும். குழந்தைகளை இதிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். அருகிலுள்ள போலியோ கேம்பை சீக்கிரம் அணுகுங்கள்.

விலை : 70-120

3 ஹெப்பாடிட்டீஸ்-பி

உங்கள் குழந்தையின் நுரையீரல் மிகவும் மென்மையானது. இந்தியாவில் ஹெப்பாடிட்டீஸ் -பி குழந்தையின் நுரையீரலை பாதுகாக்க உபயோகிக்கப்படுகிறது. எனவே குழந்தைக்கு இந்த தடுப்பூசியை மறக்காமல் போட்டுவிடுங்கள்.

விலை : ஏறத்தாழ 250

2 வயது வரம்பு : 1.5 மாத குழந்தைகள்

1 ஐபிவி

இது போலியோவை எதிர்த்து போராடும் இன்னொரு தடுப்பூசியாகும். இது போலியோவை தடுக்க உதவும் இரண்டாம் நிலையாகும். இது ஊசிவடிவில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.

விலை: 100-130

2 ஹெப்பாடிட்டீஸ் பி-2

இது குழந்தையின் நுரையீலை பாதுகாக்க போடப்படும் இரண்டாம் நிலை தடுப்பூசியாகும்.

விலை: 250

3 டிடீபி

குழந்தைகளுக்கு டிப்தீரியா, வலிப்பு மற்றும் கக்குவான் போன்ற வியாதிகள் வர வாய்ப்புள்ளது. இது குழந்தையின் நோயெதிர்ப்பு மணடலத்தை கடுமையாய் பாதிக்கும். உங்கள் குழந்தையை ஆரோக்கியமாய் பாதுகாக்க இது பரிந்துரைக்கப்படுகிறது.

விலை: ஏறத்தாழ 750

4 ரோட்டாவைரஸ்

குழந்தைகள் மிகவும் இளகிய வயிறை கொண்டிருப்பார்கள். எனவே எளிதாக பலவித நோய்த்தொற்றுக்களும் குழந்தையை பாதிக்கும். இதனால் சுகவீனம் முதல் மரணம் கூட ஏற்படலாம். குழந்தையின் வயிற்றுப்போக்கை சரிசெய்ய இது அவசியமாகும்.

விலை: 1000-1100

5 இன்ப்ளூயன்சா வகை பி(ஹிப் 1)

இது உங்கள் குழந்தைக்கு மூளை சம்பந்தப்பட்ட வியாதிகள், நிமோனியா மற்றும் இரத்த சோகை போன்ற நோய்களை உண்டாக்கும் ஹிப் வைரஸ்லிருந்து பாதுகாக்கிறது.

விலை: 50-750

6 பிசிவி

இது உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய மூளை வியாதிகள், சில வகையான காது நோய்த்தொற்றுகள் மற்றும் நிமோனியா போன்ற பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய அபாயகரமான நோய்த்தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கிறது.

விலை: 3800-4800

3 வயது வரம்பு : 2.5 மாத குழந்தைகள்

1 டிடீபி 2

இது கக்குவான் இருமல், டிப்தீரியா மற்றும் இரத்த சோகையிலிருந்து பாதுகாக்க கொடுக்கப்படுகிறது.

விலை: 750

2 ஐபிவி 2

இது போலியோவிலிருந்து பாதுகாக்க கொடுக்கப்படும் இரண்டாம் நிலையாகும்.

விலை: 120

3 இன்ப்ளுயன்சா வகை பி(ஹிப் 2)

இது உங்கள் குழந்தைகளை ஆபத்தான ஹிப் வைரஸிலிருந்து பாதுகாக்க கொடுக்கப்படும் இரண்டாம் நிலையாகும்.

விலை: 200-750

4 ரோட்டாவைரஸ் 2

இது வயிற்றுப்போக்கிலிருந்து குழந்தையை பாதுகாக்க பயன்படுகிறது. இதன் விலை சிறிது அதிகமாயிருந்தாலும் அனைத்து விதமான வயிறு பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்.

விலை: 900-1100

5 பிசிவி 2

இது உங்கள் குழந்தையை நீமோகாக்கள் பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாக்கிறது.

விலை: 4000-4900

4 வயது வரம்பு : 3.5 மாத குழந்தைகள்
1 டிடீபி 3

இது இந்த மருந்தின் மூன்றாம் நிலையாகும். இது கக்குவான், டிப்தீரியா மற்றும் இரத்த சோகையிலிருந்து பாதுகாக்கும்.

விலை: 750

2 ஐபிவி 3

இது குழந்தையை போலியோவிலிருந்து பாதுகாக்கும் மூன்றாம் நிலையாகும்.

விலை: 120

3 ஹிப் 3

இந்த மூன்றாம் நிலை மருந்து மூலம் உங்கள் குழந்தையை ஹிப் வைரஸ் தாக்குதலில் இருந்து காப்பாற்றுங்கள்.

விலை: 750

4 ரோட்டாவைரஸ் 3

உங்கள் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு வயிற்றுப்போக்கிலிருந்து பாதுகாக்கும்.

விலை: 4800

5 பிசிவி 3

நீமோகாக்கள் நோயிடமிருந்து குழந்தையை பாதுகாக்க உதவும்.

விலை: 4000-4900

6 மாத குழந்தைகள்

1 ஓபிவி 1

இந்த இரண்டாம் நிலை போலியோ மருந்து உங்கள் குழந்தையை போலியோ பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாக்கும்.

விலை: 100-120

2 ஹேப்-பி 3

நுரையீரல் நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

விலை: 100-250

வயது வரம்பு : 9-12 மாத குழந்தைகள்
1 ஓபிவி 2

இது போலியோவை ஒலிக்கும். இது ஓரல் போலியோ மருந்தின் இரண்டாம் நிலையாகும்.

விலை: 100-120

2 எம்எம்ஆர் 1

உங்கள் குழந்தையை ருபெல்லா மற்றும் தட்டம்மையிலிருந்து பாதுகாக்கும்.

விலை: 100-150

3 டைபாய்டு கான்ஜகேட் தடுப்பூசி

இது உங்கள் குழந்தையை டைபாய்டு காய்ச்சலிலிருந்து பாதுகாக்கிறது. இது குழந்தைக்கு கொடுக்கவேண்டிய முக்கியமான தடுப்பூசியாகும்.

விலை: 292

4 ஹெப்- ஏ 1

ஹெபடைடிஸ் ஏ -என்னும் கொடூரமான நோயைக் கையாள்வதில் இருந்து உங்கள் குழந்தைக்கு உதவும்.

வயது வரம்பு : 15 மாத குழந்தைகள்

1 எம்எம்ஆர்

தட்டம்மை, ரூபெல்லா போன்ற கொடூர வியாதிகளிடமிருந்து குழந்தையை பாதுகாக்கும்.

விலை: 100-500

2 வரிசெல்லா(சின்னம்மை தடுப்பூசி)

இந்த தடுப்பூசி சின்னம்மையிலிருந்து பாதுகாப்பதோடு 95% மற்ற வியாதிகளில் இருந்தும் பாதுகாக்கிறது. இது நாள்பட்ட நோய்களுக்கு எதிராக 100% தடுப்பாற்றல் வழங்குகிறது.

விலை: 1400

 

சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மறந்துவிடாதீர்கள் “வரும்முன் காப்பது நன்று”.

Leave a Reply

%d bloggers like this: