பரிசோதனைக் குழாய் (test tube) குழந்தை கருத்தரிப்பு..!!

பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் `பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்’ பாதிப்பு பெண்களிடம் தற்போது பெருகிக் கொண்டிருக்கிறது. இதனால் பெண்களிடையே குழந்தையின்மை பிரச்சினைகளும் பெருகி வருகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். தாய்மையடைய முடியாமல் தவிக்கும் பெண்களில் 60 சதவீதம் பேர் `பி.சி. ஓ.எஸ்` பாதிப்பிற்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள், என்கிறது சமீபத்திய ஆய்வு. பி.சி.ஓ.எஸ். என்றாலே மாதவிலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை. சினைப்பையில் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை. இவை இரண்டும் சரியாக இருந்தாலும், பி.சி.ஓ.எஸ். பாதிப்பு இருக்கும். பி.சி.ஓ.எஸ். பாதிப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், அது தாய்மைக்கு தடையாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்காலத்தில், குழந்தையை பரிசோதனைக் குழாய் மூலம் பெற்றுக் கொள்வது அதிகரித்து வருகிறது. அது குறித்து, இந்த பதிப்பில் பார்க்கலாம்..!

ஐ.யு.ஐ. (IUI) / ஐ.வி.எப். (IVF) முறைகள்:

மருத்துவத்துறையின் அளப்பரிய முன்னேற்றம் காரணமாக டெஸ்ட் ரியூப்பில் குழந்தையை உருவாக்கக் கூடிய முறை அறிமுகமானதால் குழந்தை இல்லாதவர்களிடையே பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.

Intrauterine insemination (IUI):

பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் சில மருந்துகளை கொடுத்து, பிறகு ovulation ஐ தூண்டி, பிறது ஒரு குறிப்பிட்ட நாளில் கணவனின் விந்தை எடுத்து மனைவிக்கு செலுத்தி விடுவார்கள். இது ஒருவகையில் இயற்கை முறையிலேயே செய்வதால் மிக சுலபமானதாக கருதப்படுகிறது. இதில் முட்டையை வெளியில் எடுக்காததால் ஒருவகையில் கரு பெண்களின் உடலிலேயே வளர்கிறது. IVF போன்று வெளியில் எடுத்து பின்பு உள்ளே விடுவதில்லை. ஆனால் இது முதல் முயற்சியில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. மேலும் மருந்து சாப்பிடும் அனைத்து முறைகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

In vitro fertilization (IVF):

டெஸ்ட் ரியூப் குழந்தை என்பது உண்மையில் ஒரு வகை செயற்கைச் சினையூட்டல் முறையாகும். அதாவது உடலுக்கு வெளியே ஆய்வு கூடத்தில் பெண்ணின் முட்டையானது சினையூட்டப்படும். அதனால் உண்டாகும் கருவை பின் கருப்பையில் பதித்து, இயற்கையாக வளரச் செய்வர். செயற்கை என்பது முகமறியா வேறொருவரின் விந்தைக் கொண்டு சினையூட்டல் எனப் பொருள்படாது. கணவனின் விந்தைக் கொண்டே பெரும்பாலும் சினைப்படுத்தப்படுகிறது. கணவரின் விந்தணுக்கள் இல்லாவிட்டாலும் கூட அவரின் விதையிலிருந்தே விந்தணுக்களை வெளியே பிரித்து எடுத்து சினையூட்டப்படும் வைத்திய வசதி இப்பொழுது உண்டு. அதுவும் முடியாத கட்டத்தில் மட்டுமே வேறு ஒருவரின் விந்தைத் தானமாகப் பெறவேண்டிய தேவை ஏற்படலாம்.  

இருந்தபோதும் In Vitro Fertilisation- IVF எனப்படும் டெஸ்ட் ரியூப் குழந்தையானது வேண்டுவோர் எல்லோருக்கும் சுலபமாகக் கிட்டிவிடுவதில்லை. இதற்கும் காரணங்கள் பல. இச்சிகிச்சை முறையின் போது மருந்து கொடுத்த பின் உற்பத்தியாகும் முட்டைகளை அல்ரா சவுண்ட் துணையுடன் வெளியே எடுத்து கணவரின் அல்லது கொடையாளியின் விந்துவவைக் கொண்டு கருவூட்டுவர்.

Leave a Reply

%d bloggers like this: