பெண்களும் மாதவிடாய் நாட்களும்..!!

பெண்களுக்கு இந்த சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகள் மிகவும் அதிகம். அதனை எதிர்கொள்வது மிகவும் கடினம். அதை விட கடினம் அவர்கள் உடல் சார்ந்த பிரச்சனை; அதுவே, பெண்கள் ஒவ்வொரு மாதமும் அனுபவிக்கும் மாதவிடாய் பிரச்சனை. இந்த காலத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதால் பெரிதும் பாதிக்கபடுகிறார்கள். 

மாதவிடாய் சரியாக வந்தாலும் தொல்லை வரவில்லை என்றாலும் தொல்லைதான். மாதவிடாய் வந்தால் பெண்கள் உடல் வலியால் பாதிக்க படுகிறார்கள். சீரான மாதவிடாய் வராமல் இருக்கும் பெண்களுக்கு வேறு எதாவது உடல் கோளாறுகள் இருக்குமோ என்று மனதளவில் பயப்பட தொடங்குகிறார்கள். எது எப்படி இருந்தாலும் மாதவிடாய் காலங்களை பெண்கள் நிச்சயம் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும் நாள் மற்றும் உதிரப்போக்கின் தன்மையை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

இது மட்டும் இல்லை, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பொதுவான மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள் நமக்கு சில அறிகுறிகளை காட்டும். அது நமது உடல் நிலையை சார்ந்ததாக இருக்கும். இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் தகுந்த கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் மாதவிடாய் காலங்கள் எவ்வாறு உங்கள் உடல் நிலையை கணிக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதிகமான உதிரப்போக்கு:

மாதவிடாய் காலங்களில் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு இருப்பது கவனிக்க பட வேண்டிய ஒன்று. ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட தடவை மாதவிடாய் ஏற்படும்போது மருத்துவரின் ஆலோசனையை கேட்பது அவசியம். இது பைப்ரோய்ட் கட்டியின்( fibroid tumour) அறிகுறியாகவும் இருக்கலாம்.

குறைந்த உதிரப்போக்கு:

குறைந்த அளவிலான உதிரப்போக்கு என்பது பெண்களுக்கு ஒரு வரம் போலாகும். எப்போதுமே குறைந்த அளவாக இருக்கும் போது எந்த அச்சமும் தேவையில்லை. திடீரென்று உதிரப்போக்கின் அளவு குறையும் போது அது தைராய்டின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது கர்ப்பப்பையில் திசுக்களில் சேதம் ஏற்பட்டும் இருக்கலாம்.

சீரற்ற மாதவிடாய்:

எப்போது மாதவிடாய் வரும் என்று தெரியாத அளவிற்கு சீரற்ற மாதவிடாய் என்பது பரிசோதிக்க பட வேண்டிய ஒன்று. உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். பாலிஸிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் அல்லது தைரொய்ட் பிரச்சனையாக இருக்கலாம். இதனால் கருவுறுதலில் சிக்கல் ஏற்படலாம். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் எடை குறைப்பும் ஏற்படும்.

தீராத வயிற்று வலி:

மாதவிடாய் காலத்தில் பொதுவாக வயிற்றில் வலி ஏற்படும். அதை விட அதிகமான வலி வயிற்றில் ஏற்படும்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும். கருப்பையில் தோன்றும் கட்டியின் காரணமாகவும் இந்த அதிகமான வலி ஏற்படலாம். 

மன உளைச்சல்:

மாதவிடாய் காலங்களுக்கு முன் சிலருக்கு அதிக மன உளைச்சல் ஏற்படும். ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது. ஆகவே மன உளைச்சல் அதிகமாக ஏற்படும்போது, அது மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தின் பாதிப்பாக கூட இருக்கலாம். அது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

மாதவிடாய் காலங்களில் உடல் அளவில் சில வலிகள் இருந்தாலும், குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் இதனை புரிந்து கொண்டு, பெண்களுக்கு உதவும்போது , மனதளவில் அவர்கள் மகிழ்ச்சியோடு இந்த காலகட்டத்தை கடக்கலாம்.

Leave a Reply

%d bloggers like this: