முட்டையின் இன்றியமையாத 5 பயன்கள்…!

முட்டை என்றாலே நமது சமையல் அறையில் இருக்கும் உணவு பொருள் என்பதே பெரும்பாலானோர் அறிந்தது. இது சத்தான உணவு பொருள், குழந்தைகள் விரும்பி உண்ண கூடியது என்பது உண்மை தான். ஆனால் முட்டை ஒரு அழகு சாதனப்பொருள் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். சிலர் உபயோகித்திருப்போம். இங்கு உணவு பொருளாக இல்லாமல் முட்டையின் இன்றியமையாத 5 பயன்களை பார்க்கலாம்.   

1 கரும்புள்ளி

மூக்கு மற்றும் கன்னத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை நீக்கவும் முட்டை பயன்படுகிறது. முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியே எடுத்து கொள்ளவும். எலுமிச்சை சாறு, தேன் மற்றும் சமையல் சோடாவை வேண்டுமானால் இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இவை சருமத்தை விரைவில் சரி செய்ய உதவும். அந்த கலவையை முகத்தில் தடவவும், அது நன்கு உலரும் முன் மீண்டும் அதன் மேல் என்று மூன்று முறை போட்டு உலர செய்து, நீக்கி விடவும். இதை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

2 மிருதுவான முடி

நீங்கள் என்னதான் முட்டை கலந்த ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் வாங்கி உபயோகித்தாலும், அது உண்மையான முட்டைக்கு ஈடாகாது. முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து, ஆலிவ் எண்ணையுடன் கலந்து கொள்ளவும். இதன் கலவையை உங்கள் தலை மற்றும் முடியில் மென்மையாய் தடவவும். அரைமணி நேரத்திற்கு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும். முட்டையில் இருக்கும் புரதம், உங்கள் தலை முடியை வலுவாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.

3 காப்பி

காப்பியின் கசப்பு தன்மையை குறைக்க முட்டையின் ஓடுகள் பயன்படுத்தப்படுகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மையில் முட்டை ஓடுகள் சேர்க்கப் படுகின்றன. முட்டை ஓடுகள் காரமாக இருக்கும் போது காப்பி அமிலமாகிறது. எனவே இது சுவையை மாற்றி கசப்பை குறைத்து விடும். சுத்தமான முட்டை ஓடுகளை காப்பி கொட்டைகளுடன் சேர்க்கும் முன் நன்கு பொடி செய்து கொள்ளவும். நீங்கள் எப்போதும் போலவே காப்பி அருந்தலாம். ஆனால் சுவையில் வேறுபாட்டை காண்பீர்கள்.

4 சருமத்தை சுத்தம் செய்ய

 

உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும், நிறத்தை அதிகரிக்கவும் முட்டையின் மஞ்சள் கருவை உபயோகித்து மாஸ்க் போடலாம். மசிக்கப்பட்ட அவோகேடோ உடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15 நிமிடங்களுக்கு பிறகு நன்கு உலர்ந்தவுடன் முகம் கழுவுவதற்கு முன் சிறிய துண்டால் உலர்த்தவற்றை நீக்கி விட்டு கழுவவும். பின் ஈரப்பதத்தை தக்க வைக்க எண்ணெய்களை உபயோகிக்கவும்.

5 வரித்தழும்புகள்

வரித்தழும்புகளை சரி செய்வதற்கான சிறந்த பொருள் முட்டையின் வெள்ளைக்கரு. வெள்ளைக்கருவை தனியே பிரித்து, வரி தழும்புகளின் மேல் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் அல்லது நன்கு உலர்ந்த பின் கழுவவும். பின் ஈரப்பதத்தை தக்க வைக்க கோகோ வெண்ணைய் அல்லது ஆலிவ் எண்ணையை பயன்படுத்தவும். முட்டையில் உள்ள புரதம் சரும செல்களை மீண்டும் உருவாக்கவும், கொலாஜன் வரித்தழும்புகளை குறைக்கவும் உதவுகிறது. இதை தினமும் செய்வதன் மூலம் நல்ல மாற்றத்தை காணலாம்.  

Leave a Reply

%d bloggers like this: