வயதை பொறுத்து கருத்தரிப்பதில் ஏற்படும் மாற்றங்கள்..!

ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் பெண்களின் உடல் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. கருத்தரிக்க சரியான வயது எது என்று இதுவரை கணிக்கப்படவில்லை. இங்கு பெண்கள் 20, 30 மற்றும் 40 வயதில் கருத்தரிக்கும் போது ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி பார்க்கலாம்.  

உங்கள் வயது குறைவாக இருக்கும் போது, உங்கள் குழந்தையின் பின் ஓடக் கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கும். ஆனால் அதற்கு தேவையான பணம் அதிகம் இருக்காது. அதுவே உங்கள் வயது சற்று அதிகமாக இருந்தால், வாழ்வின் அனுபவங்கள் மற்றும் தேவைக்கேற்ப பணம் ஆகியவற்றை பெற்றிருப்பீர்கள். நீங்கள் கொஞ்சம் வயதானவராக இருந்தால், உங்கள் குழந்தையை தாங்குவது மற்றும் அதன் வளர்ச்சி போன்றவை கடினமான ஒன்றாக இருக்கும்.

20 – 24 வயது

இது பெண்களின் உடலின் கருமுட்டை வளர்ச்சிக்கான வளமான காலமாகும். இந்த காலத்தில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சரியான கால இடைவெளியில் இருக்கும் மற்றும் இனப்பெருக்க திறனானது அதிகமாக இருக்கும். இது பெண்கள் எளிதில் கருத்தரிக்க கூடிய காலமாகும்.

இந்த காலத்தில் தான் பெண்கள் தங்கள் வாழ்வின் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் ஆர்வத்துடன் செயல்பட்டு கொண்டிருப்பார்கள். இலட்சியத்தை கொண்டிருக்கும் பெண்கள் பெரும்பாலும் இந்த வயதில் திருமணத்தை தவிர்த்து, எதிர்காலத்தை நோக்கி கவனம் செலுத்துவார்கள். பெண்கள் பெரும்பாலும் திருமணத்தை தள்ளி போட நினைத்தாலும், சமூக உந்துதல் காரணமாக ஆரம்ப காலங்களிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் விரைவில் தாயாக விரும்புவதில்லை.

20 முதல் 24 வயதுகளில் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு 9.5 சதவிகிதமாகும். உங்களது கருமுட்டை இளமையாக இருப்பதால், குழந்தையை ஆரோக்கியமாகவும், குறைபாடுகள் இன்றியும் பெற்றெடுக்க முடியும்.

25 – 29 வயது

உங்கள் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்தல் மற்றும் சத்துணவு உணவை சாப்பிடுதல் போன்றவற்றை செய்தால் கர்ப்பத்தில் எந்த சிரமமும் இருக்காது. இதன் மூலம் பிரசவத்தின் பின் உடல் அழகை கட்டுக்குலையாமல் திரும்ப பெற்றிடலாம். மேலும் 20 -களில் கருத்தரிப்பது, மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.

நீங்கள் 20 வயதை கடந்தவரானால், நிலையான வருமானத்தையும் உங்கள் பணியில் நல்ல இடத்தையும் அடைந்திருப்பீர்கள். நீங்கள் பொறுப்பானவராகவும், அனுபவசாலியாகவும் மாறி இருப்பீர்கள். இந்த வயதில் குழந்தையை கவனித்துக் கொள்ள நீங்கள் முழுமையாக தயாராக இருப்பீர்கள்.

30 – 34 வயது

இந்த வயதில், உங்கள் உடலின் இனப்பெருக்க திறனும் கருமுட்டை வளர்ச்சியும் குறைய துவங்கி இருக்கும். இதெற்கென நீங்கள் கருவுறுதலுக்கான சிகிச்சையைத் தேர்வு செய்ய விரும்பினால், 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களை விட உங்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். உங்களுக்கு வயதாகி இருப்பதால் சில நேரங்களில் சிகிச்சைக்கு பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.

எந்த ஒரு பெண் அவளது இருபது வயதுகளில் பணி செய்து சிறந்த நிலையை அடைந்திருந்தால், அவர்களால் கட்டாயம் ஒரு குழந்தையை சமாளிக்க முடியும். அவர்கள் இந்த உலகை நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களது சகிப்பு தன்மையும், பிரச்சனைகளை சரி செய்யும் திறனும் மிக சிறப்பானதாக இருக்கும். இவர்கள் விவேகமானவர்களாகவும், தனித்தன்மை உடைய தாயாகவும் திகழ்வார்கள்.

35 – 39 வயது

35 வயதை கடந்து விட்ட பெண்களுக்கு கருமுட்டையின் வளர்ச்சி படிப்படியாக குறைய துவங்கும். இதில் தாய்மை அடையும் வாய்ப்பும் வெகுவாக குறைந்து விடும். இதற்கான எளிய காரணம், பெண்கள் அதிக அளவிலான கருமுட்டைகளுடன் பிறந்திருந்தாலும், ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் இழக்கிறார்கள். ஒரு பெண் 38 – 39 வயதை அடையும் போது, அவர்களது உடலில் உள்ள போதுமான முட்டைகள் அழிக்கப்படுகின்றன. எஞ்சி இருப்பவை பழையவையாகவும், பலவீனமாகவும் இருக்கும்.

35 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடைய பெண்கள் எந்த ஒரு கருத்தடையும் இல்லாமல் கணவருடன் ஒரு வருடம் தாம்பத்தியம் கொள்ள பரிந்துரைக்க படும். அந்த ஒரு வருடத்திற்கு பிறகு இதற்கான மருத்துவம் துவங்கப்படும். ஆனால் அதுவே 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, ஆறு மாத கால தாம்பத்தியம் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவம் துவங்கப்படுகிறது.

இந்த வயதில் பெண்களுக்கு இருக்கும் உயர் இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்த கூடியது. மேலும் நீரழிவு ஆபத்து மும்மடங்காக இருக்கும். குழந்தை குறைபாடுகளுடன் பிறப்பதற்கும், சிசேரியனுக்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கும்.

குழந்தைகளின் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படலாம். இந்த வயதில் கருத்தரிக்கும் பெண்களுக்கு இரட்டை குழந்தை, மூன்று குழந்தை போன்றவை உருவாகும் வாய்ப்புகள் அதிகம். கருப்பை ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை வெளியிடுவதால், இதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

40 வயதிற்கு மேல்

இந்த வயதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், மருந்துகளின் உதவியுடன் கருத்தரிக்கலாம் என்பது தான். குழந்தையின் உடல் நலம் தாயின் உடல்நலனை சார்ந்தே இருக்கும். கர்பிணிப்பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொண்டால், ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். அவர்கள் முன்பே ஒரு குழந்தையை பெற்றிருந்தால், அதிக அளவில் பிரச்சனையை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்கள் இந்த வயதில் இரத்த அழுத்தம், சிறுநீர்ப்பை அழுத்தம், வயிறு பிரச்சினைகள் மற்றும் கருப்பை பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

முடித்த வரை 20 – 30 வயதிற்குள் குழந்தை பெற்று கொள்ள முயற்சியுங்கள். இதுவே குழந்தை பேற்றிற்கான சிறந்த வயது.  

Leave a Reply

%d bloggers like this: