உங்கள் குழந்தைக்கு சரியாக தான் உணவு அளிக்கிறீரா..?

குழந்தைகள் பிறந்த சில மாதங்களுக்கு பின், 5-7 மாத காலகட்டத்தில் குழந்தைகள் திட உணவை உட்கொள்ள தயாராக இருப்பர். அக்கால கட்டத்தில் குழந்தைக்குக் கட்டாயம் தர வேண்டிய உணவுகளை பற்றி, பெற்றோர் அறிந்திருப்பது அவசியம். அதே சமயம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் நீங்கள் சரியாக அளிக்கிறீரா? குழந்தைக்கு சரியான உணவுகளை தான் அளிக்கிறீரா என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியம்..! 

வாருங்கள் தாய்மார்களே! குழந்தைகளின் உணவில் கட்டாயம் அமைந்திருக்க வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி படித்து அறியலாம்..!

உணவின் தன்மை..!

குழந்தைக்கு பற்கள் முளைக்காத நிலையில், மிகவும் மென்மையான குழந்தைகள் விரும்பக்கூடிய சுவையில் உணவு அமைய வேண்டும். குழந்தை பருவம் முதலே சரியான உப்பு மற்றும் இனிப்பு சுவையை அளவாக உணவில் சேர்த்து பழக்க வேண்டும்; இனிப்பினை அறவே ஒதுக்காமல், சரியான அளவு, குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும்.

குழந்தைக்கு தரும் நொறுக்குத்தீனிகள் வகையும் மிக மென்மையாக, வீட்டில் சுத்தமாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். முழுதானியங்களைக் கொண்டு தயாரித்த தீனிகளை குழந்தைக்கு வழங்கவும்..!

பழங்கள்..!

குழந்தைக்கு அனைத்து வகை பழங்களையும் பழக்கமாக்க முயல வேண்டும். சில குழந்தைகளுக்கு சிலவகை பழங்கள் ஒவ்வாமை உண்டு பண்ணலாம்; அச்சமயம் மருத்துவரிடம் கலந்தாலோசித்து பழவகைகளை குழந்தைக்கு அளிக்கவும்..! குழந்தைகளுக்கு தினம் பழங்களை அளிக்கவும்; குழந்தை பாலமாக உண்ண மறுத்தால், பழச்சாறாக குழந்தைக்கு புகட்டவும்.

காய்கறிகள்..!

குழந்தைக்கு எல்லா வித காய்கறிகளையும், சிறு வயது முதலே பழக்கமாக்க முயலுங்கள், பெற்றோர்களே! ஏனெனில் அனைத்துவித சத்துக்களையும் நம்மால் காய்கறிகளில் எளிதாக பெறலாம். குழந்தைகளின் உணவில் தினம் காய்கறிகளை ஒரு அங்கமாக்குங்கள்..! கீரைகளையும் குழந்தைக்கு தினம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.

பருப்பு வகைகள்..!

தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில், சிறந்த புரதச்சத்து மற்றும் உடலின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, குழந்தையின் உணவில் தினசரி ஏதேனும் பருப்பு மற்றும் தானிய வகைகள் இடம் பெறுமாறு சமைத்து, உணவினை குழந்தைக்கு வழங்கவும்.. 

பால் பொருட்கள்..!

குழந்தைக்கு பால் மற்றும் பால் பொருட்களின் தேவை மிக அதிகம். குழந்தைகளின் வளர்ச்சியில் பால் பொருட்களை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆகையால் குழந்தைகளுக்கு பால் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட தயிர், மோர், இனிப்பு வகைகளை பழக்கப்படுத்துங்கள்.!

என்னதான் குழந்தைக்கு திட உணவுகள் தர தொடங்கினாலும், குழந்தைக்கு தாய்ப்பால் அளிப்பதை நிறுத்த வேண்டாம் தாய்மார்களே! தாய்ப்பால் சுரப்பு நிகழும் வரை குழந்தைக்கு தினமும் 3 வேளைகளாவது தாய்ப்பால் அளிக்கவும்…!

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: