கணவர் உண்ட இலையில் மனைவி உண்ண வேண்டுமா? காரணம்?!

நம் முன்னோர்கள் அறிமுகப்படுத்தி சென்ற பல பழக்க வழக்கங்களுள் கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண வேண்டும் என்பதும் ஒன்று. இதை முன்னோர் சொல்படி பின்பற்றி வந்த பெண்கள் சமுதாயம் திடீரென ஆணாதிக்கம் என்று கூறி, இந்நிகழ்வை நிறுத்தத் தொடங்கிவிட்டது. உண்மையில் இந்த செயல் ஆணாதிக்கமா அல்லது அறிவார்ந்த செயலா என்பதன் காரணத்தை இந்த பதிப்பில் படித்து அறியலாம்.. 

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும், கணவரில் ஏற்படும் மாற்றங்களை, அவர் உண்ட உணவினை உண்டு குழந்தைக்கு பால் அளிப்பதன் மூலம், அவருள் நிகழும் உடனுக்குடனான மாற்றங்களை குழந்தைக்கு கடத்தவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர். 

ஆகையால் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கம் என்றெல்லாம் எண்ணாமல், குழந்தையின் நலனுக்காக வாழ்க்கையின் ஒன்றிணைந்த பயணத்திற்காக முன்னோர் அறிமுகப்படுத்திய இந்த நிகழ்வினை முடியும் போதெல்லாம் பின்பற்றலாமே தம்பதியர்களே..!

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: