குழந்தைகளிடம் ஊக்குவிக்க வேண்டிய 5 குணங்கள்..!

உலகில் உள்ள அனைவருக்கும் பிறப்பு என்பது சமமான ஒன்று. அதில் எந்த ஒரு வித்தியாசமும் இருப்பதில்லை. உலகை பற்றி புரிதலும் அனைவருக்கும் ஒன்று தான். ஆனால், சிலர் அளவிட முடியாத அளவிற்கு வெற்றியையும் மற்ற பலர் இருள் சூழ்ந்த பகுதியில் இருப்பதை போல் தோல்வியிலும் மூழ்கி இருக்கிறார்கள். இது பிறந்த இடத்தினாலோ, அவர்களின் ஜோதிடத்தாலோ அல்லது விதியை சார்ந்தோ மாறுபடுவதில்லை. அவர்களின் மதிப்பு மற்றும் குணாதிசயங்களை பொறுத்தே மாறுபடுகிறது. அதனால், குழந்தையின் நல்ல குணங்களை ஊக்குவிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும். இங்கு குழந்தையிடம் கட்டாயம் ஊக்குவிக்க வேண்டிய 5 குணங்களை பார்க்கலாம். 

1 பரிவு

குழந்தைகளிடம் மட்டுமல்லாது பெரியவர்களிடமும் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று தான் பரிவு. மற்றவர்களுடன் இருக்கும் பரிவானது, குழந்தைகள் அவர்களின் சிந்தனை மூலமாக புரிந்து கொள்ள உதவுகிறது. அவர்களது வாழ்வில் மனிதர்களை சிறந்த வழியில் சமாளிக்கவும், சிறந்த வாழ்க்கையை வழிநடத்தவும் இது உதவியாக இருக்கும்.

2 நேர்மை

பெற்றோர்களுக்கு எப்போதும் குழந்தைகள் தொடர்பான கவலைகள் இருந்து கொண்டே இருக்கும். குழந்தைகள் எதையாவது மறைக்கவோ அல்லது பொய் சொல்லவோ துவங்கி விட்டால், அவர்களது பிரச்சனைகளை பற்றி அவர்களிடம் பேசுவது கடினமாகி விடும். எனவே, குழந்தைகளுக்கு நேர்மையின் முக்கியத்துவத்தை கதைகளின் மூலம் உணர்த்தி நேர்மையை கற்பித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

3 பணிவு

பொதுவாக நாம் குழந்தைகளை அவர்களால் முடிந்ததை சிறப்பாக செய்து வெற்றி பெற ஊக்குவிப்போம். அவர்களிடம் பணிவு எனும் குணத்தை ஏற்படுத்துவதும் முக்கியமான ஒன்றாகும். ஒரு வெற்றிகரமான நபர் பெரும் வெற்றியை அடைந்து, நிறைய பணம் சம்பாதிக்கிறவர் அல்ல, மாறாக வெற்றிபெற்ற பின்னரும் அவரது குணாதிசயங்களை தக்க வைத்து கொள்பவர். எனவே, குழந்தைகளை வெற்றியை நோக்கி ஊக்குவிக்கும் போது பணிவின் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

4 ஆர்வம்

நாம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த உலகில் வாழ்கிறோம். இங்கு எதையும் பேசுவதற்கு நமக்கு சுதந்திரம் இருக்கிறது. நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும், நிலைகளிலும் அனைத்து கேள்வி கேட்க கூடிய உலகம் இது. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், அடுத்த தலைமுறை இன்னும் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும் என்பதே. குழந்தையகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்த பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர்களிடம் கேள்வி எழுப்பலாம். அதனால் அவர்கள் அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்களைக் கவனிக்க துவங்குவார்கள்.

5 பொறுமை

நல்ல விஷயங்களுக்காக காத்திருப்பவர்களுக்கு, நல்லதே நடக்கும். குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெற முக்கியமாக கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் ஒன்று பொறுமை. நாம் வாழ்வில் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் பலன் கிடைக்க சிறிது காலம் எடுக்கும். உதாரணமாக, குளிக்க சூடு நீர் வேண்டுமானால் அது தயாராகும் வரை காத்திருக்க வேண்டும். அது போலத்தான் வாழ்வில் வெற்றி பெற பொறுமை அவசியம். எனவே, பொறுமை வாழ்வில் மிக முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று.

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: