குழந்தைகளின் இருமல், மார்பு சளியை குணமாக்கும் மருந்துகள்..!!

பிறந்த குழந்தைகள் முதல் வளர் பருவ குழந்தைகள் வரை யாவரும், இருமல், சளி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்; இந்த நோய்களால் பாதிக்கப்படும் போது, குழந்தைகள் மிகவும் பலவீனமாகி நடைமுறை செயல்களை செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்நோய்கள் ஒரு முறை ஏற்பட்டுவிட்டால், குணமாக குறைந்தது ஒரு வார காலமாவது ஆகலாம். இந்நோய்களை விரைவில் குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்துகள் பற்றி இப்பதிப்பில் படித்து அறிவோம்..! 

இருமல் குணமாக 

ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட கொடுத்தால், குணமாகும்.

வறட்டு இருமல் குணமாக

கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட கொடுத்தால், வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக

முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட கொடுத்தால், ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.

சளிகட்டு நீங்க 

தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட கொடுத்தால், இறைப்பு, சளிகட்டு நீங்கும்.

தலைபாரம் குறைய

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளிப்பாட்ட தலைபாரம் குறையும்.

மார்புச்சளி நீங்க

ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட கொடுத்தால், மார்புச்சளி குணமாகும்.

மூக்கடைப்பு நீங்க

ரோஜா மலரை முகர வைத்தால், மூக்கடைப்பு நீங்கி விடும்.

ஜலதோஷம் குணமாக

முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட கொடுத்தால், குணமாகும்.

வாந்தி நிற்க

துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்.

குமட்டல் 

கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைக்க வைத்தால் குமட்டல் இருக்காது.

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: