குழந்தைகளும் நாமும் உட்கொள்ள வேண்டிய ஒமேகா..!!

‘சத்துமிக்க உணவுகளை உட்கொள்ளுங்கள்; குழந்தைகளுக்கு அளியுங்கள்’ என்று ஆலோசனை சொல்லும் மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும் ஒமேகா என்ற வார்த்தையும் அவ்வப்போது சொல்வதுண்டு. உணவியல் தொடர்பான கட்டுரைகளிலும் ஒமேகா என்ற வார்த்தையை அடிக்கடி பார்க்கிறோம். அது என்ன ஒமேகா?! அதில் ஏதேனும் வகைகள் உண்டா?! வாருங்கள் குழந்தைகளுக்கு தேவையான ஒமேகாவினை பற்றி இந்த பதிப்பில் படித்து அறிவோம்…!  

ஒமேகாவில் இருக்கும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 என இரண்டு முக்கியமான வகைகள் உள்ளன. இந்த வகைகளைப் பற்றித்தான் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.

ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் பற்றிய தெளிவு நம்மிடம் குறைவாகவே இருக்கிறது. ஒமேகா – 3 மற்றும் ஒமேகா – 6 இந்த கொழுப்பு அமிலங்கள் இரண்டும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அவர்களின் உடலில் ஏற்படும் பழுதுவேலைகளுக்குத் தேவைப்படுகின்றன.

எந்த உணவுகள்..!?

செடிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் மற்றும் கொட்டைகளில் ALA மற்றும் LA இரண்டும் காணப்படுகிறது. உணவுப்பொருட்களில் LA-ன் அளவு பொதுவாக ALA-ஐவிட அதிகமாக இருந்தாலும், ரேப்சீட்(Rape seed) எண்ணெய் மற்றும் வால்நட் கொட்டை எண்ணெய் ஆகியவற்றில் ஒமேகா-6 கொழுப்புஅமிலங்கள் காணப்படுகிறது.

EPA மற்றும் DHA ஆகியவை எண்ணெய், சிலவகை மீன்களில் (சால்மன், காணாங்கல், ஹெர்ரிங், மத்தி) காணப்படுகின்றன. இறைச்சி மற்றும் முட்டையின் மஞ்சள் கரு போன்ற விலங்கு சார்ந்த உணவு வகைகளின் மூலமும் ஒமேகா – 6 கொழுப்பு அமிலத்தைப் பெறலாம்.

மேற்கூறிய உணவுகளை குழந்தைக்கு அளிப்பதன் மூலம் ஒமேகா சத்தினை குழந்தை பெறுமாறு செய்யலாம்…

ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 விகிதம்

இன்று பெரும்பாலான மக்கள் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களை உணவில் எடுத்துக் கொண்டாலும், ஒமேகா 3-ல் நிறைந்த விலங்கு சார்ந்த உணவுகளை குறைவாகவே உண்கிறார்கள். இந்த முரண்பாடான விகிதமே நம் உடலுக்கு சேதம் விளைவிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. அதிகமான ஒமேகா-6 மற்றும் குறைவான ஒமேகா-3 விகிதம் உடலில் அதிகப்படியான வீக்கத்துக்கு (Inflammation) வழிவகுக்கும். அனைத்து நோய்களும் வரக்கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது.

எது சரியான விகிதம்?

மருத்துவர்களின் கருத்துப்படி, 4:1 முதல் 1:4 விகிதம் வரை இருப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஆதிகால மனிதர்கள், வேட்டையாடி உணவுகளை சேகரித்தார்கள். அவர்களது உணவு 2:1 முதல் 4:1 என்ற விகிதத்தில் இருந்தது.

அதே நேரத்தில் ஒமேகா-3 நிறைந்த கடல் உணவுகளை உட்கொண்ட இன்யூட் இனத்தவர்கள் எடுத்துக் கொண்ட அளவு 1:4 என்ற விகிதத்தில் இருந்தது. இந்த மக்கள் அனைவருமே மிக ஆரோக்கியமானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு நீண்ட கால நோய்களான சர்க்கரை நோய், உடல் பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படவில்லை. இந்த மக்களில் யாரும் ஒமேகா-6 நிறைந்த உணவுகளை சாப்பிடவில்லை என்பதை நாம் அறிய வேண்டும். ஆனால், இன்று நாம் 16:1 என்ற விகிதத்தில் இந்த கொழுப்பு அமிலங்களை அதிகம் எடுத்துக்கொள்கிறோம், குழந்தைகளுக்கும் அளிக்கிறோம் என்பதை நாம் அறிவது மிக அவசியம்.

Leave a Reply

%d bloggers like this: