குழந்தை பிறந்தபின் சேமிப்பு: 5 குறிப்புகள்..!!

சாதாரணமாய் சென்று கொண்டிருந்த வாழ்வில், சகாப்தமாய் தோன்றிய உங்கள் குழந்தையால், உங்களின் வரவு மற்றும் செலவு விகிதங்களில் பல மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில், குழந்தை பிறந்த அந்த நிமிடம் முதல், அறுவை சிகிச்சை, ஊசிகள், மருந்துகள், மாத்திரைகள் எனவும், பிறந்து வளர்க்கத் தொடங்கியவுடன், குழந்தைக்கான உணவு, ஆடைகள், ஆரோக்கியம், கவனிப்பு, படிப்பு என பல விஷயங்களை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும்; இவை அனைத்தையும் சமாளிக்க உங்களுக்கு தேவையான ஒரு பெரிய விஷயம் பணம்.

அத்தகைய பணத்தை, குழந்தை பிறப்புக்கு பின், நீங்கள் எவ்வாறு சேமிக்க வேண்டும் மற்றும் செலவுகளைத் தவிர்க்கும் வழிகள் என சில குறிப்புகளை இப்பதிப்பில், படித்து அறியலாம் வாருங்கள் பெற்றோர்களே..!

1. குழந்தையின் தேவைகள்..!

நீங்கள் வெளியில் செல்லும் போதோ அல்லது பயணத்தில் ஈடுபடும் போதோ, குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும், அதாவது, குழந்தைக்கான தண்ணீர், பால், குழந்தையின் ஆடைகள், சிறு தீனிகள், உணவுகள், டையப்பர்கள் போன்றவற்றை உடன் வைத்திருப்பதால், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, பதற்றமில்லாமல் பயணத்தில் ஈடுபடலாம்..!

2. குழந்தையின் உணவுகள்..!

“குழந்தைக்கு என்று எந்த பொருள் வாங்க, வீதிக்கு சென்றாலும் யானை விலை குதிரை விலை தான்.” ஆகையால், குழந்தையின் உணவு பொருட்களான, செர்லாக், பிஸ்கெட்கள் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி, குழந்தையின் ஆரோக்கியத்தையும் கெடுத்து, சேமிப்பையும் வீணாக்குகிறீர்கள்.

இப்பிரச்சனையை சரி செய்ய, நீங்களே வீட்டில் குழந்தைக்கான ஆரோக்கியமான உணவினை, சுகாதாரமான முறையில் தயாரித்து கொடுக்கலாம்; ஆப்பிள் மசியல், வாழைப்பழ மசியல், கேரட் மசியல் என குழந்தைகளுக்கான உணவினை நீங்களே தயாரிக்க ஆரம்பியுங்கள்; இவை கடைகளில் கிடைக்கும் செர்லாக் போன்றவற்றை விட சிறந்தவையே!

3. குழந்தையின் ஆடைகள்..!

முன்கூட்டியே முடிவு செய்து, குழந்தைகளுக்கான ஆடைகளை வாங்காதீர்கள்; ஏனெனில் குழந்தைகள் திடீரென்று வளர்ந்து விடுவர்; ஆகையால், ஒவ்வொரு காலத்திற்கேற்ப அளவான ஆடைகளை வாங்கி உபயோகித்துவிட்டு, குழந்தை வளர்ந்துவிட்டால், பின் வேறு ஆடைகளை வாங்கிக் கொள்ளலாம். இம்முறையை பின்பற்றினால், ஆடைகளில் செலவிடப்படும் பெரும் தொகையை சேமிக்கலாம்..!

4. டையப்பர்கள்..!

குழந்தைக்கு தேவைப்படும் டையப்பர்கள் போன்ற பொருட்களை சில்லறையாக வாங்குவதை விட, மொத்தமாக வாங்கி வைப்பது செலவினைக் குறைக்கும்; சேமிப்பைக் கூட்டும். டையப்பர் போன்ற குழந்தைக்குத் தேவைப்படும் அத்யாவசிய பொருட்களை மொத்தமாக வாங்க முயலுங்கள்..

5. ஆன்லைன் கடைகள்..

நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களை, குடும்பத்துடன் சென்று வெளியில் வாங்கினால், குழந்தைகள் அழும் மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாம் உடன் வைத்திருக்க வேண்டும் என பல விஷயங்கள் உள்ளன. அதே ஆன்லைனில் நாம் பொருட்களை வாங்க முடிவு செய்தால் இப்பிரச்சனையும் இல்லை; கடைக்கு செல்லும் பெட்ரோல் செலவு, கடையில் வாங்க சென்றது ஒன்றாக இருக்கும்; ஆனால், வாங்கி வந்தது பத்தாக இருக்கும். இவை அனைத்தையும் நாம் ஆன்லைனில் வாங்குதல் மிக நல்லது; ஏனெனில் செலவு குறைவு மற்றும் நம்மால் தள்ளுபடி விபரங்களை எளிதில் அறிய முடியும் மற்றும் இந்நாட்களில், அதிக தள்ளுபடிகளும் ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு தரப்படுகின்றன.

இவையன்றி, குழந்தை பிறப்புக்கு முன்னே திட்டமிட்டு சேமிப்பது, உறவினர்களுடன் பொம்மை, சைக்கிள் போன்ற பொருட்களை பரிமாற்றிக் கொள்வது செலவுகளைக் குறைக்க வழிவகுக்கும். குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் வைப்பதை விட, உங்கள் பெற்றோர் மற்றும் நீங்களே நேரம் ஒதுக்கி குழந்தையை பார்த்துக் கொள்வது அதிக நலம் பயக்கும். 

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: