குழந்தை பிறப்புக்குப்பின் காதலைக் காணும் 8 வழிகள்…!

குழந்தைகள் நம் வாழ்வில் வந்தவுடன் அதிகமான மகிழ்ச்சி, சந்தோசம், பயம், பொறுப்பு என அனைத்துவிதமான உணர்ச்சிகளும் பொறுப்புகளும் மேலோங்கத் தொடங்கும். இத்தனை அதிக வேலைகளில், நம்மின் வாழ்க்கைத் துணையை காதலிக்க நாம் மறந்துவிடுகிறோம். எத்தனை தான் வேலைகள் இருந்தாலும், நாம் காதலையும் அன்பையும் நம் வாழ்க்கைத் துணையுடன் பகிர மறக்கக் கூடாது. 

ஆகையால், குழந்தை பிறந்த பின்னரும் உங்களுக்கிடையே இருக்கும் காதலைக் காணும் சில வழிகளை பற்றி இப்பதிப்பில் காணலாம்..

1. துணையுடன் ஓர் இரவு..!

குழந்தையை தூங்க வைத்துவிட்டு, உங்கள் அன்னையரை குழந்தை கவனிப்பில் ஈடுபடுத்திவிட்டு, உங்கள் துணையுடன் இரவு உணவை வெளியில் சென்று, உண்டு துணையுடன் அளவளாவுங்கள்; உங்கள் காதலை, காதல் மொழிகளை பகிருங்கள். இது உங்கள் உறவை மேலும் பலப்படுத்தும்.

2. வீட்டில் இரவின் ஜாலம்..!

குழந்தையை பெற்றோர் கவனிப்பில் விட்டுவிட்டு, உங்கள் துணைக்கு பிடித்த உணவுகளை வீட்டில், உங்கள் கையால் சமைத்து, திரைப்படம் பார்த்துக் கொண்டோ அல்லது மனம் விட்டு பேசிக்கொண்டோ நேரம் செலவிடலாம்; இது உங்களிடையே இருக்கும் பிணைப்பை அதிகப்படுத்தும்.

3. திட்டமிட்டு பின்பற்றுங்கள்..

உங்கள் துணையுடன் தினமும் ½ மணி அல்லது 10 நிமிடங்களையாவது தனித்து செலவிடுவது என்று திட்டமிட்டு, அதை பின்பற்ற தொடங்குங்கள். இதனால் உங்களுக்கிடையே இருக்கும் காதலை தினமும் வளர்க்கும் வாய்ப்பை பெறுவீர்.

4. ஆச்சரியப்படுத்துதல்..

உங்கள் துணை ஆச்சரியப்படுமாறு, சில விஷயங்களை அல்லது சின்ன சின்ன செயல்களை செய்து மகிழ்ச்சிப்படுத்த முயலுங்கள். இது உங்கள் மீதான காதலை அதிகப்படுத்திட தூண்டுதலாக இருக்கும்.

5. ஓரணியாக செயல்படுங்கள்..!

இருவரும் எந்த சூழ்நிலை, எத்தகைய கஷ்டம் நேர்ந்தாலும் ஓரணியாக இருந்து செயல்பட்டு வென்றுகாட்டுங்கள். இது உங்களின் ஒற்றுமையை பலப்படுத்தி, உங்களின் காதலை அதிகரிக்கும்.

6. பரிசுகள் வழங்குதல்..!

உங்கள் துணைக்கு பிறந்த நாள் போன்ற சிறப்பான நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் மற்றும் உங்களுக்குள் காதல் ஊற்று பெருக்கெடுக்கையில் என துணைக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சிப்படுத்துங்கள்; இது உங்கள் மீதுள்ள அன்பை அதிகரிக்கச் செய்யும்; உங்களின் அன்பை உணர்த்தும்.

7. ஊர் சுற்றுதல்..

எப்பொழுதெல்லாம் விடுமுறை கிடைக்கிறதோ அல்லது நீங்களே விடுமுறையை உருவாக்கிக் கொண்டு துணையுடன் ஊர் சுற்றி மகிழுங்கள்; இது உங்களுக்கு வேலைப்பளுவால் ஏற்படும் மனஅழுத்தத்தைக் குறைத்து, ஒரு மாறுதலாக ஒத்திருக்கும். 

தம்பதியர்களே! எப்பொழுதும் ஒரே மாதிரி வாழ்க்கையை வழிநடத்தாமல், சற்று வாழ்க்கை முறையை மாற்றி பாருங்கள்.. அது உங்களின் மனதுக்கு புதுவித மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து, உங்களுக்கிடையேயான காதலை அதிகரிக்கும். பிடித்திருந்தால், பதிப்பை பகிருங்கள்..

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: