சிசேரியனுக்கு பின் அம்மாக்கள் செய்ய வேண்டிய 4 விஷயங்கள்..!

குழந்தையை பிரசவிப்பது வலியுடையதாக இருந்தாலும், குழந்தையின் அற்புதமான வருகையை தம்பதிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அனைத்தும் சாதாரணமாகவும் எந்த வித சிக்கலும் இல்லாமல் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால், அவை அனைத்தும் நம் கட்டுபாட்டிலோ அல்லது நம் கைகளிலோ இல்லை. சுகப்பிரசவம் மற்றும் சிசேரியன் பெண்களின் பிரசவ நேர சிக்கல்களை பொறுத்தே அமைகிறது. சிசேரியன் என்பது அறுவை சிகிச்சையாகும். இது குழந்தை அம்மாவின் பிறப்புறுப்பிலிருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்படும் போது, வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கும் முறை. இங்கு சிசேரியனுக்கு பிறகு செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத 4 விஷயங்கள் பற்றி பார்க்கலாம். 

1 உடலுறவு

சிசேரியனுக்கு பிறகு உடலுவில் ஈடுபடக் கூடாது. இது சிசேரியன் செய்து கொண்ட பெரும்பாலான அம்மாக்கள் சந்திக்க கூடிய சாதாரணமான ஒன்று தான். வலியின் காரணமாக மற்றும் அவர்களின் உடலின் செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சை காயத்தினாலும், அவர்களுக்கு உடலுறவின் மீது ஈடுபாடு ஏற்படுவதில்லை. எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் உடலுறவில் ஈடுபட்டால், முன்பை காட்டிலும் அதிக வலி ஏற்படும்.

2 வலி நிவாரணி

நீங்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு அழகான புதிய உயிரை பூமிக்கு கொண்டு வந்திருந்தாலும், பிரசவத்தின் பின் உங்களுக்கு அதிக வலி ஏற்படும். இந்த வலி சில காலத்திற்கு நீடிக்கும். எனவே, இந்த சமயத்தில் உங்களுக்கு வலியை கட்டுப்படுத்த கூடிய வலி நிவாரணிகள் பரிந்துரைக்கப்படும். நீண்ட காலத்திற்கு இவற்றை நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும். இதன் விளைவாக நீங்கள் தடுமாற்ற உணர்வுடனும், அதிக நேரம் தூக்கத்திலும் இருப்பீர்கள்.

3 மலச்சிக்கல்

இது ஒரு மோசமான எதிரி. இது உங்கள் நாளை சீரழிக்க கூடிய திறமை உடையது. முன்பு இது சீரற்ற குடல் இயக்கங்களால் ஏற்பட்டிருக்கும் அல்லது இதன் மற்றொரு பெயர் மலச்சிக்கல். நீங்கள் முன்பு இவற்றை எதிர்த்து போராடி இருக்கலாம். ஆனால், இப்போது அது முற்றிலும் மாறுபட்டிருக்கும். உங்களது சீரற்ற ஹார்மோன் மாற்றத்தாலும், நீங்கள் எடுத்து கொள்ளும் வலி நிவாரணியும், உங்கள் செரிமான மண்டலத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், நீங்கள் கழிவுகளை வெளியேற்ற எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும் வீண் தான்.

4 தாய்ப்பாலூட்டுதல்

குழந்தையை பிரசவிப்பது என்பது எளிய செய்யல்ல. அதிலும் சிசேரியன் பிரசவம் இரண்டு மடங்கு மோசமானதாக இருக்கும். நாம் எப்போதும் சொல்வோம், தாய்ப்பால் குழந்தைக்கு சிறந்த உணவு என்று, அதே போல் தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு முக்கியமான ஒன்று. இதனாலே, பிரசவம் முடிந்த உடன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், சிசேரியன் முறையில் குழந்தையை பிரசவித்திருந்தால், தாய் வலுவிழந்தும் மிகுந்த வலியுடனும் இருப்பார்கள். இதனால் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது கடினமாகி விடுகிறது. குழந்தைக்கு எவ்வளவு குறைந்த அளவில் தேவைப்பட்டாலும் தாய்ப்பாலூட்டுவது சிரமம் தான். இதனால் குழந்தைக்கு பாலூட்ட வேறு சில வழிகள் இருக்கின்றன. 

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: