சிறந்த அன்னையாக விளங்கும் இல்லத்தரசிகள்:10 காரணங்கள்

வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் வீட்டினையும் கவனித்து, வீட்டிலுள்ளோரையும் கவனித்து, குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்வாறு வீட்டில் உள்ளோரை எல்லாம் கவனித்துக் கொண்டாலும் தன் குழந்தைக்கு சிறந்த அன்னையாக திகழ்கின்றனர். அப்படி அவர்கள் சிறந்த அன்னையாக திகழ்வதற்கான காரணங்களை இந்த பதிப்பில் படித்து அறியலாம்..! 

1. திட்டமிட்ட வாழ்க்கை..!

இல்லத்தரசிகள் தங்கள் வாழ்க்கையை மிக தெளிவாக திட்டமிட்டு, இந்த நேரத்தில் இதை செய்ய வேண்டும் என்று வாழ்வர். அவர்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு அளிப்பது, அவர்களை கவனித்துக் கொள்வது என குழந்தைக்கான செயல்களை சரியாக, யாருடைய உதவியும் இல்லாது அவர்களே செய்கின்றனர். எனவே இல்லத்தரசிகளை சிறந்த அன்னைகள் என்று சொல்வது மிகையாகாது.

2. சகலகலாவல்லி..

வீட்டில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகள், உறவுகள் கவனிப்பு, குழந்தை கவனிப்பு என பல்வேறு வேலைகளை ஒரே நேரத்தில் திறம்பட செய்யும் ஒவ்வொரு இல்லத்தரசியும், சகலகலா வல்லியே..!

3. சுறு சுறுப்பானவர்…!

வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்தலும், தன்னுடைய வேலைகளையும் அதாவது, அவர்களுக்கு என இருக்கும் பொழுது போக்கு நிகழ்வுகளையும், வேலைகளையும் விடாமல், சோம்பேறி தனம் இல்லாமல் செய்ய இல்லத்தரசியால் மட்டுமே முடியும்.

4. குழந்தையின் படிப்பு..

இல்லத்தரசிகள் எத்துணை வேலைகள் செய்தாலும், குழந்தைகளுக்கு கற்ப்பிக்க வேண்டியவற்றை திறம்பட கற்பித்து, அவர்களை மேதையாக்கும் பணியில் பெரும் உத்வேகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

5. நிதி நிர்வாகம்..

வீட்டின் அனைத்து வேலைகள் செய்கையிலும், குடும்பத்தின் நிதி நிலைமையை எண்ணி, அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு, சிக்கனமாக குடும்பத்தை நடத்தும் சிறந்த நிதி அமைச்சர்கள்.., இல்லத்தரசிகள்..!

6. வேலை..

குடும்பத்தை முழுமையாக கவனித்துக் கொண்டாலும், குடும்ப நிதி நிலையை உயர்த்த வீட்டிலிருந்தே தன்னால் முடிந்த வேலைகளை செய்து, வேலையையும் குடும்பத்தையும் திறனுடன் கவனிக்க இல்லத்தரசியால் மட்டுமே முடியும்..

7. நேரம்..

எத்துணை வேலை செய்தாலும், தன் குழந்தைகளுடன் பேசி, சிரித்து, விளையாண்டு மகிழ என அழகாக நேரம் ஒதுக்கி, குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு அவர்களின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டும் ஜீவன் இல்லத்து அன்னையே!

8. கூட்டுக்குடும்பம்..

குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளோர் என வீட்டில் எத்துணை பேர் இருப்பினும் அனைவரையும் பாரபட்சம் காட்டாது, அழகாக கவனித்து, எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ள இல்லத்தரசியால் மட்டுமே முடியும்.. எல்லோரையும் இணைக்கும் உறவுப்பாலம் இல்லத்தரசி..

9. தேவை..

வீட்டின் தேவையை முன்னரே திட்டமிட்டு, அனைத்தையும் சரியாக அளவாக வாங்கி வைத்து, வீட்டின் தேவையை குறையில்லாது நிறைவேற்றும் நிறையானவள், இல்லத்து அன்னை..!

10. குழந்தையின் குறும்பு..

வீட்டில் குழந்தைகளின் குறும்பால் ஏற்படும் கலவரங்களையும் அழகாய், பொறுமையாய் சமாளித்து, எளிதாக குழந்தைகளுக்கு புத்தி புகட்டி, எழிலாக எல்லாவற்றையும் மேலாண்மை செய்ய இல்லத்தரசியால் மட்டுமே இயலும்..

இத்தனை அற்புதங்களையும் ஒரே ஆளாய் நிகழ்த்தும் இல்லத்தரசி, சிறந்த அன்னை மட்டுமல்ல; சிறந்த பெண்; சிறந்த தாயுமானவள்..!!

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: