திருமண வாழ்வில் கட்டாயம் இடம் பெற வேண்டிய 5 விஷயங்கள்..!!

வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான். ஒவ்வொரு உறவும் உங்கள் வாழ்க்கையை சொழிப்பாக்க உதவுகிறது. இதில் கணவன் மனைவி உறவு என்பது மட்டும் ஏதோ ஒரு இனம் தெரியாத பாசப்பிணைப்பால் உருவானது. உங்களால் மற்ற உறவுகளுடன் பேசாமல் குறைந்தது ஒரு நாளாவது இருக்க முடியும் ஆனால் உங்களது வாழ்க்கை துணையுடன் ஒரு நாள் முழுவது பேசாமல் உங்களால் நிம்மதியாக இருக்க முடியாது.  

இத்தகைய உறவை இன்னும் இனிமையாக்க தினமும் இதை எல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

1. முத்தம்

தினமும் நான் உன்னை காதலிக்கிறேன் மற்றும் நீயே என் உலகம் என்று சொல்வதை காட்டிலும் அதை உணர்த்தும் விதமாக முத்தமிடுவது மிகச்சிறந்ததாகும். தினமும் குறைந்தது 30 விநாடிகளாவது உங்கள் துணையின் கண்களை பார்த்தவாறு முத்தமிடுவது உங்களது உறவில் காதலையும் ஒருவித குதுகலத்தையும் உருவாக்கும்.

2. பேச நேரம் ஒதுக்குங்கள்

உங்களது வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் சரி, உங்களது துணையுடன் பேச நேரம் ஒதுக்குங்கள். உங்கள் துணையிடம் பேசும் போது உற்சாகமாக தான் பேச வேண்டும் என்பதில்லை, உங்களது கவலைகளை மனதிற்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டிருக்காமல் அதை உங்களது துணையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவ்வாறு உங்களது கவலைகளை பகிர்ந்து கொள்வதால், அதற்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ அதை பற்றி நீங்கள் மேலும் கவலைப்படாமல் இருக்க முடியும். உண்மையான மகிழ்ச்சியும் கிடைக்கும்.

3. இணைப்பு

உங்களது துணையுடன் ஒரு முழுமையான தொடர்பில் இருக்க வேண்டியது அவசியம். வெறும் வார்த்தைகள் மூலம் மனதில் இருக்கும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. அனைவராலும் அனைத்தையும் வெளியே சொல்ல முடியாது. சில சமயங்களில் நாம் ஏன் இவ்வாறு இருக்கிறோம் என்பது நமக்கே கூட தெரியாது.

இது போன்ற சூழ்நிலைகளை கடந்து வர அவர்களின் கரங்களை பிடித்து பணிவுடன் பேசிப்பாருங்கள். அவர்களது பிரச்சனை என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் அவரின் சூழ்நிலையை புரிந்து நடந்துகொள்ளவாவது முடியும்.

4. பாராட்டுங்கள்

நம் அனைவருக்கும் பாராட்டுக்களை பெறுவது மிகவும் பிடிக்கும். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். நம் மீது நமக்கே ஒரு மரியாதை தோன்ற உதவியாக இருக்கும். எனவே உங்களது துணை செய்யும் சின்ன சின்ன உதவிகளை எல்லாம் சிறியதாக நினைக்காமல் அவர்களை பாராட்ட பழகிக்கொள்ளுங்கள்.

5. வாய்விட்டு சிரிப்பது

வாய்விட்டு சிரிப்பது சிறந்தது தான் ஆனால் அதை விட சிறந்தது உங்களது துணையுடன் சேர்ந்து சிரிப்பதாகும். ஏதேனும் நகைச்சுவைகளை பேசி அல்லது கதைகளை பேசி சிரிப்பது உடலில் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்க உதவுகிறது.

ஏதேனும் நகைச்சுவையான விஷயங்களை பார்த்து ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இருவரும் இணைந்து சிரிப்பதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: