பிறந்த குழந்தையிடம் தவிர்க்க வேண்டிய 5 செயல்கள்..!

ஒரு பெண் கர்ப்பமடைந்த பிறகு, அதை செய்ய கூடாது இதை செய்ய கூடாது என பலவற்றை சொல்வார்கள். குழந்தை பிறந்த பிறகும் அது தொடர்கதை தான். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ஒவ்வொன்றை சொல்வார்கள். ஆனால் பிறந்த குழந்தையிடம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 செயல்களை இங்கு பார்க்கலாம்.   

1 முத்தம்

முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு தான். ஆனால் குழந்தைகள் பிறந்த சில வாரங்களில், அவர்கள் வைரஸ் மற்றும் பாக்ட்டீரியாவால் ஏற்படக்கூடிய நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். உங்கள் குழந்தை அழகாய் இருக்கிறது என அந்நியர்கள் முத்தமிட வந்தால், மென்மையாய் அவர்களிடம் முத்தமிட வேண்டாம் என்று கூறுங்கள். குழந்தையை தூக்கும் முன் கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். குழந்தையை தூக்கும் முன் கைகளை கழுவ சொல்லுங்கள். வாய் மற்றும் கைகளில் இருக்கும் கிருமிகளாலும் குழந்தைகள் பாதிக்கப்படலாம்.

2 பரிசோதனையை தவறவிடாதீர்கள்

முதலில் உங்கள் குழந்தைக்கான மருத்துவரின் சந்திப்பை உறுதிப்படுத்தி, தவற விடாமல் இருக்க அட்டவணைப்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கலாம், ஆனால் அடிக்கடி மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். நீங்கள் ஏதாவது ஒன்றை பற்றி கவலைப்பட்டாலோ அல்லது பொதுவாக அனைத்தும் சாதாரணமாக இருக்கிறதா என்பதை மருத்துவரிடம் மட்டுமே கேட்க முடியும். உங்கள் அலைபேசி அல்லது நாள்காட்டியில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.

3 டயப்பர் அல்லது துணி

ஏன் இவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். குழந்தைகள் அவற்றை விரைவில் அழுக்கடைய செய்து விடுவார்கள் என்பதே நடைமுறை. குழந்தையால் அவர்களின் அசௌகரியத்தை வெளிப்படுத்தவோ அல்லது சொல்லவோ முடியாது. டயப்பர் அல்லது துணி அழுக்கடைந்த பிறகு நீண்ட நேரம் விட்டு விட்டால், அது குழந்தைக்கு அலர்ஜி மற்றும் நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்தும். எனவே சரியான இடைவெளியில் குழந்தையின் டயப்பர் அல்லது துணியை மாற்றி குழந்தையை சௌகர்யமாக உணர செய்யுங்கள்.

4 தேன் இரப்பர்

பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகள் அழும் போது தேன் இரப்பர் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உங்கள் குழந்தை பசியால் அழும்போது தாய்ப்பாலுக்கு மாற்றாக தேன் இரப்பர்களை கொடுக்காதீர்கள். இந்த தேன் இரப்பர்களை கொடுப்பதால், உங்கள் குழந்தைக்கான உணவு இடைவெளியில் மாற்றம் ஏற்படும். தாய்ப்பால் மற்றும் புட்டி பாலை குழந்தைக்கு உணவாக கொடுங்கள். குழந்தை தேன் இரப்பரை சப்புவதில் அவர்களின் சக்தி முழுவதையும் இழந்து விடுவார்கள்.

5 வயிற்றின் மேல் படுத்தல்

ஒரு புறமாகவோ அல்லது வயிற்றின் மேல் (குப்புற படுத்து) தூங்கும் குழந்தைகள் SIDS -யால் (திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறி) பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். பெரும்பாலும் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளே இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். SIDS-கான உண்மையான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. ஆனால், குழந்தையை சுற்றி போர்த்தும் துணி போன்றவைகளை கொண்டு தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன. குழந்தை முதுகு புறமாக தூங்குவது SIDS -கான வாய்ப்பை குறைகிறது.     

 

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: