10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..!

10 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழும்; இத்தனை நாள் மை போன்று மசித்த உணவுகளை விரும்பிய குழந்தை, அவற்றை விட சிறிது கெட்டித்தன்மை கொண்ட திட உணவுகளை சாப்பிட முயலும். குழந்தையே உணவுகளைக் கையில் எடுத்து, வாயில் வைக்க முயலலாம். இது போன்ற சில மாற்றங்கள் 10 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..!! 

திங்கள்

என்னதான், குழந்தைகளுக்கு திட உணவின் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தாலும், தாய்ப்பாலை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது. ஆகையால், காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், கோதுமை தோசை அல்லது கோதுமை பேன்கேக்கைக் கொடுக்கலாம். மதியம், பாசி பருப்பு கிச்சடியையும், சாயங்கால வேளையில், பேரிக்காய் அல்லது முலாம் பழம் இவற்றை குழந்தைக்குக் கொடுக்கவும். இரவில், ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ கஞ்சியை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

செவ்வாய்

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், இட்லி அல்லது தோசையை கொடுக்கலாம். மதியம், வீட்டில் செய்த தயிரைப் பயன்படுத்தி, தயிர் சாதம் செய்து கொடுக்கவும்; சாயங்கால வேளையில், கேரட் அல்லது உருளைக்கிழங்கு இவற்றை குழந்தைக்கு கொடுக்கவும். இரவில், காய்கறிகளைக் கொண்டு தோசை செய்து குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

புதன்

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், காய்கறிகளைக் கொண்டு தோசை செய்து குழந்தைக்கு கொடுக்கலாம். மதியம், மசித்த தக்காளி ரசம் சாதத்தையும், சாயங்கால வேளையில், வாழைப்பழ பேன்கேக்கைக் குழந்தைக்கு அளிக்கவும். இரவில், கோதுமையைக் கொண்டு கஞ்சி தயாரித்து, குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

வியாழன்

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், காய்கறிகளைக் கொண்டு உப்மா அல்லது ரவை உப்மா செய்து குழந்தைக்குக் கொடுக்கலாம். மதியம்,பருப்பு சாதத்தையும், சாயங்கால வேளையில், ஆப்பிள் கேரட் சூப் தயாரித்து குழந்தைக்கு அளிக்கவும். இரவில், சாதத்தில், சிறிது சாம்பார் ஊற்றி, பிசைந்து குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

வெள்ளி

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பருப்பு கிச்சடியை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மதியம், காய்கறிகள் சேர்த்த சாதத்தையும், சாயங்கால வேளையில், ஆப்பிள் மில்க்ஷேக்கைக் குழந்தைக்கு அளிக்கவும். இரவில், இட்லி அல்லது தோசையைக் குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

சனி

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், ப்ரெட்டால் செய்த உப்புமாவைக் கொடுக்கலாம். மதியம், கீரை சாதத்தையும், சாயங்கால வேளையில், லஸ்ஸி வகை, இனிப்பு கலந்த தயிரையும் குழந்தைக்கு அளிக்கவும். இரவில், உப்புமாவினை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

ஞாயிறு

காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பச்சை பயறில் செய்த தோசையைக் கொடுக்கலாம். மதியம் பருப்பில் செய்த, காய்கறிகள் சேர்த்த கிச்சடியையும், சாயங்கால வேளையில், நறுக்கப்பட்ட பன்னீரையும் குழந்தைக்கு கொடுக்கவும். இரவில், கேழ்வரகில் செய்த தோசையை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.

பன்னீர், முட்டை, பருப்புகள் போன்ற உணவுகளை குழந்தைகள் முதன் முதலில் உண்பதால், ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று கவனித்து, அளிக்கவும். குழந்தைகளுக்கு வயிறு நிறையும் வரை, உணவினைக் கொடுத்தால் போதுமானது. ஒரே மாதிரியான சுவையில் குழந்தைக்கு அளிக்காமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சுவையில், குழந்தை விரும்பும் வகையில் உணவினைக் குழந்தைக்கு சமைத்துக் கொடுக்கவும். அதிக காய்களையும் பலன்களையும் குழந்தையின் உணவில் சேர்க்கவும். 

மேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: