ஏன் திருமணத்தின் பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது..?

திருமணம் என்பது ஒரு புத்தகத்தின் புதிய பக்கம் போன்றது. உங்களது சொந்த கதையை உருவாக்கி, உங்கள் அனுபவங்களை எழுத வேண்டும். இது உங்கள் வாழ்கை துணையுடன் ஆரம்பமாகி இருக்கும் மறக்க முடியாத நினைவுகளுடனான பயணம். இப்போது நீங்கள் இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் நன்கு தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வேண்டும். ஏனெனில், நீங்கள் இருவரும் இந்த வாழ்கை பயணத்தில் இணைந்திருக்க கூடிய துணைகளாக இணைத்து வாழப் போவதால்.  

ஒரு பெண்ணின் வாழ்வில் திருமணமானது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். ஏனென்றால், அவள் தன் சொந்த வீட்டைவிட்டு வெளியேறி, தன் வாழ்கை துணையுடன் இன்னொரு வீட்டை உருவாக்க போகிறாள். இதனால், அவர்களுக்குள் ஏற்படும் அதிக மன அழுத்தத்தின் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது.

திருமணத்தின் பின் பெண்களின் வாழ்வில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இங்கு திருமணத்தின் பின் ஏன் பெண்களின் உடல் எடை அதிகரிக்கிறது என்று பார்க்கலாம்.

திருமணத்தின் முன் உங்கள் மீது உங்களுக்கே அக்கறை அதிகமாக இருந்திருக்கும். உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான உணவு எடுத்து கொள்வது, தினசரி உடற்பயிற்சி என அனைத்தையும் செய்திருப்பீர்கள். நீங்கள் நடனமாடுதல், ஓடுதல், குதித்தல், மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் நடைப்பயிற்சி போன்றவற்றை செய்திருப்பீர்கள். உங்களுக்கு திருமணம் முடிந்ததும் நீங்கள் இவற்றை நிறுத்தி இருப்பீர்கள்.

திருமணத்தின் முன் மிதமான இரவு உணவை எடுத்து கொண்டிருப்பீர்கள். திருமணத்தின் பின் உங்கள் கணவரை அசத்த விதவிதமாக சமைக்க துவங்கி இருப்பீர்கள். உங்கள் இருவருக்கும் பொறுமையாய் கிடைக்க கூடிய உணவு நேரம் இரவு உணவாக இருப்பதால், உங்களது இரவு உணவின் அளவு மாறி இருக்கும்.

திருமணத்தின் பின் பெண்கள் புதிய வீட்டில் அவர்களது பாதுகாப்பை பற்றி கவலைப் படுவார்கள். திருமணத்தின் யோசனைகள் அனைத்தும் புதிதாக இருப்பதால், திருமணத்தின் ஆரம்பத்திலேயே அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இது அவர்களின் உடல் தோற்றத்தை கடுமையாக பாதிக்கிறது.

திருமணத்தின் பின் பெண்கள் அவர்கள் மீது கவனம் எடுத்து உடல் எடையை கட்டுக்குள் வைப்பது என்பது கடினமான ஒன்றாகும். உங்களுக்கு திருமணமாகி இருப்பதால், நீங்கள் எப்படி இருந்தாலும் கணவரால் விரும்ப படுவீர்கள். உங்களது தோற்றத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால், உங்கள் கணவரின் அன்பு மாறாது எனும் எண்ணம் வந்து விடும். உணவு என்பது உங்களது உற்ற தோழியாக மாறி இருப்பதால், நீங்கள் எப்போதும் சாப்பிடுவதை நிறுத்த மாட்டீர்கள்.

உங்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம், உடலுறவு கொள்வது. இது மட்டுமே நீங்கள் எப்போதாவது அல்லது அடிக்கடி செய்ய கூடிய உடல் பயிற்சியாகும். இதனாலும் உங்கள் உடல் எடை அதிகரிக்கும். அடிப்படையில், இது உங்கள் உடலின் ஹார்மோன்களை வெளியேற்றி உடலை எளிமையாக்குவதோடு, உங்களை முழுமையாக ஓய்வு பெற செய்கிறது. இது உங்களை நன்கு உறங்க செய்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. 

Leave a Reply

%d bloggers like this: