இரட்டைக் குழந்தை பெற கூறப்படும் கட்டுக்கதைகள்..!!

அனைவருக்குமே இரட்டைக் குழந்தைகள் மீது ஓர் ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது. நம் மக்களிடையே இரட்டைக் குழந்தைகள் குறித்த சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் உள்ளன. மேலும் அது வெறும் மூடநம்பிக்கை என்று தெரிந்தும், பலர் அதைப் பின்பற்றுவார்கள். இக்கட்டுரையில் நம் மக்களிடையே இரட்டைக் குழந்தைகள் பற்றி இருக்கும் சில கட்டுக்கதைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.  

கட்டுக்கதை #1 

இரட்டையர்களுள் ஒருவர் அல்லது பரம்பரையில் இரட்டைக் குழந்தை உள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இதை உறுதியாக கூற முடியாது. 

கட்டுக்கதை #2 

ஒட்டியிருக்கும் இரட்டைப் பழங்களை சாப்பிட்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் என்னும் கருத்து. ஆனால் வெறும் இரட்டைப் பழங்களை சாப்பிட்டால் மட்டும் இரட்டைக் குழந்தை பிறந்துவிடாது. 

கட்டுக்கதை #3 

பலரும் இரட்டை எண்களில் உடலுறவில் ஈடுபட்டால், இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். இது முற்றிலும் முட்டாள்தனமான ஓர் நம்பிக்கை. 

கட்டுக்கதை #4 

எதைக் கொண்டு இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. அது என்னவெனில் அன்னாசிப் பழத்தின் மையப் பகுதியை உட்கொண்டால், இரட்டைக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாம். 

கட்டுக்கதை #5 

மற்றொரு பிரபலமான ஓர் கட்டுக்கதை, உடலுறவு கொள்ளும் நிலை. உடலுறவின் போது ஆண் மேலே இருந்தால், அது இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பை அதிகரிக்குமாம்.

Leave a Reply

%d bloggers like this: