குழந்தைகளிடம் தினம் கேட்க வேண்டிய 7 கேள்விகள்..!!

நீங்கள் எவ்வளவு பிஸியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் குறைந்தது இரவு நேர உணவையாவது குழந்தைகள் மற்றும் வீட்டில் இருப்பவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது அவசியம். இது உங்களுக்கு மன நிம்மதியை கொடுக்கிறது. மன அழுத்தத்தை குறைப்பதாகவும் உள்ளது. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுடன் நேரத்தை கழிக்க இது சிறந்த நேரமாக அமைகிறது. இவ்வாறு குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடும் போது நீங்கள் குழந்தைகளிடம் சில கேள்விகளை கேட்பது அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இருக்கும். நீங்கள் என்னென்ன கேள்விகளை கேட்கலாம் என்பதை காணலாம்.   

#1 இன்றைக்கு மிகவும் மகிழ்ச்சியாக அல்லது கடினமாக இருந்தது என்ன? 

#2 மதிய உணவு இன்று யாருடன் அமர்ந்து சாப்பிட்டாய்? 

#3 நீ இன்று செய்த மிகச்சிறந்த விஷயம் என்ன? 

#4 நீ மனநிறைவாக உணர்கிறாயா? 

#5 உன்னை மிக அதிகமாக சிரிக்க வைத்த விஷயம் எது? 

#6 டி.வியில் ஒளிபரப்பாகும் செய்திகள் தொடர்பாக உனக்கு ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா? 

#7 நாளை நீ என்ன செய்ய விரும்புகிறாய்?

நீங்கள் இந்த கேள்விகளை தினம் கேட்பதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி நிலையை, அதன் திறமையை அறிந்து கொள்ள முடியும்..

Leave a Reply

%d bloggers like this: