குழந்தைகள் வளர்ச்சிக்கு நாம் அளிக்கும் உணவுகள் மட்டும் போதுமானவையா என்றால், நிச்சயம் இல்லை. குழந்தைகள் பலவித செயல்களில் ஈடுபடுவதால், அவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்கலாம். அப்படி பசிக்கும் சமயங்களில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை அளிக்க வேண்டியது தாய்மார்களின் கடமையாகும். ஆகையால், குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய நொறுக்குத் தீனிகள் பற்றி இந்த பதிப்பில் படித்தறியலாம்..!
திங்கள்:
நறுக்கியப் பழத்துண்டுகள், தேனில் ஊறிய பலாப்பழம், பேரீச்சை, ஆவியில் வேகவைத்த நேந்திரம்பழம், மாதுளை முத்துக்கள், சப்போட்டாபழம், நெல்லி, சிவப்புக் கொய்யா, சீத்தாபழம், தேன் கலந்த நறுக்கிய பப்பாளி.
செவ்வாய்:
அவல் லட்டு, பொரி உருண்டை, நிலக்கடலை உருண்டை, எள் உருண்டை, தினை உருண்டை, அத்திப்பழ உருண்டை, சத்துமாவு உருண்டை, கேழ்வரகு அல்வா.
புதன்:
புட்டு, இலை கொழுக்கட்டை, சுண்டல், சப்பாத்தி ரோல், பால் கொழுக்கட்டை, உப்பு உருண்டை, பொரிவிளாங்காய் உருண்டை, கறுப்பு உளுந்து உருண்டை.
வியாழன்:
காய்கறி சாலட் வகைகளை, எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து தரலாம். முளைகட்டிய தானியங்களின் கலவை.
வெள்ளி:
மினி இட்லி, மினி அடை, மினி தோசை, கட்லட், மாப்பிள்ளைச் சம்பா முறுக்கு, தினை ரிப்பன் பக்கோடா, கவுனி அரிசி சீடை, அவல் உப்புமா, இனிப்பு அவல்.