தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் எந்த உணவினை எப்பொழுது உண்ண வேண்டும் என்பனவற்றை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் ஊட்டும் தாய்ப்பாலே குழந்தையின் எதிர்கால ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. எனவே தாய்மார்களே! நீங்கள் எந்த செயல் செய்தாலும் அதில் உங்கள் குழந்தையின் நலன் முன்னிலை வகிக்க வேண்டியது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உண்ண வேண்டிய உணவுகள் குறித்து இந்த பதிப்பில் படித்து அறியலாம்..!
முட்டை
முட்டையில் உள்ள புரதச் சத்து மற்றும் துத்தநாகம் ஆகியவை பிரசவத்திற்கு பின் உடலுக்கு மீண்டும் அதன் வலிமையை கொண்டு வர உதவுகின்றன.
மீன்
குழந்தை பெற்ற பின் மின் சாப்பிடுவது சிறந்தது. மேலும் ஓமேகா 3 உள்ள மீன்களை உண்பது சிறந்த பலன்களைத் தரும். இவை உடலுக்கு இழந்த சக்தியை மீட்டுத் தருகின்றன.
பால்
பாலில் உள்ள சுண்ணாம்பு அதாவது கால்சியம் தாய்ப்பால் தரும் பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. தாய்ப்பால் உருவாவதற்கு சுண்ணாம்பு சத்து அதிகம் தேவைபடுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது இரணடு டம்ளர் பால் அருந்துவது நல்லதாகும்.
தர்பூசணி
அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்களின் உடல் நிலை மீண்டும் அதன் பழைய சக்தியையும் செயல்களையும் செய்வதற்கு சிறிது கால அவகாசம் தேவைபடுகின்றது. தர்பூசணி உங்களுக்கு எளிதில் செரிமானமாக உதவுகிறது.
தண்ணீர்
உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி ஈரப்பதத்தை மேம்படுத்த தண்ணீர் உதவுகிறது. இது உங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், தாய்ப்பாலும் நான்றாக சுரக்கும்.
தயிர்
கால்சியம் மற்றும் துத்தநாகம் உள்ள தயிர் மிகவும் சிறந்த உணவாகும். இதை நாமக்கு விருப்பமான எந்த வகை உணவுடனும் சேர்த்து சாப்பிடலாம். பிரசவ அறுவை சிகிச்சையை எதிர் கொண்டிருக்கும் மகளிருக்கு தயிர் மிக சிறந்த மற்றும் ஊட்டமளிக்கும் உணவாகும்.
வால்நட்
அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதை சாப்பிடுவதால் அவர்களுடைய உடலில் புரதச் சத்துகளும், போலிக் அமிலத்தின் உற்பத்தியும் மிகுதிப்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை பிரசவத்திற்கு பின் இதை சாப்பிடுவது உடலின் சக்தியை அதிகரிக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த பழமாகும். இவை அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு எந்த வித தொற்று நோய்கள் வரவிடாமல் பார்த்துக் கொள்ளும்.
கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகள்
நார்ச்சத்து மிகுத்த உணவுகளை உண்ண வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கீரைகள், பச்சை காய்கறிகள் அகியவற்றை தினசரி சாப்பிட வேண்டும். இது நமது செரிமாணத்தை அதிகப்படுத்தி குடலை சுத்தப்படுத்த உதவுகின்றன.