பெற்றோர்களான பின் காதலைக் காணும் வழிகள்..!!

குழந்தை பிறந்ததற்கு பிறகு குழந்தையுடனேயே உங்களது முழு நாளும் கழியும். கணவன் மனைவி இருவரும் ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தை கூட தனிமையில் கழிக்க முடியாது. உங்களுக்கென இருக்கும் இடம் பறிபோய்விடும். குழந்தை வந்தவுடன் கூட கணவன் மனைவி இருவரும் தங்களுக்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருவரும் மனம்விட்டு பேசி சந்தோஷமாக காதலர்களை போல இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு இருந்தால் தான் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் சிறு சிறு கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்க முடியும். சரி, குழந்தை பிறந்த பிறகும் கூட எப்படி கணவன் மனைவி இருவரும் தனிமையில் நேரம் செலவழிக்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.   

1. தினமும்..!

தினமும் ஒரு காதல் விஷயத்தை உங்களுடன் துணையுடன் சேர்ந்து செய்யுங்கள். தினமும் ஒன்று தானே இன்று சாதாரணமாக நினைப்பீர்கள், ஆனால் இதை கூட நீங்கள் செய்வதில்லை என்பது தான் உண்மை. எனவே தினமும் ஒரு ரொமான்டிக் விஷயத்தை செய்ய மறக்காதீர்கள். 

2. நீண்ட நேர விளையாட்டு 

உடலுறவுக்கு முன்னர் நீண்ட நேரம் விளையாடுவது, காதல் நிறைந்த பார்வை மற்றும் தொடுதல்கள் கண்டிப்பாக உடலுறவுக்கு முன்னால் இருக்க வேண்டியது அவசியம். இது உங்களது உறவை மேம்படுத்தும். 

3. உறவை பற்றிய புரிதல் 

உங்களது உறவில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள், உங்கள் துணை செய்யும் எந்த விஷயம் உங்களை காயப்படுத்துகிறது, எந்த விஷயம் சந்தோஷப்படுத்துகிறது. என இருவரும் மனம்விட்டு பேசுங்கள். மனம்விட்டு பேசினால் பல பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு, மகிழ்ச்சியும் பிறக்கும். எதையும் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு இருப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். 

4. பாராட்டுங்கள் 

உங்கள் மனைவி உங்களுக்காக செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்காகவும், அவரை பாராட்டுங்கள். குழந்தைகள் முன்னர் கூட உங்களது மனைவியை பாராட்டலாம். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் எதிர் பாலினத்தவர்களை மதிக்க கற்றுக்கொள்வார்கள். உங்களது கணவன் மனைவி உறவும் வழுவாக இருக்கும். 

5. அலைபேசி இல்லாத உலகம் 

நமது நேரத்தை செல்போன்கள் வேகமாக உறிஞ்சிவிடும் எனவே அலைபேசி இல்லாமல் ஒருநாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரங்களாவது வாழுங்கள். இது உங்களது அருகில் இருக்கும் உறவுகளின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும். கணவன் மனைவி இருவரும் பேச நேரமும் கிடைக்கும். 

6. இரண்டு உறவும் சமம் 

கணவன் மனைவி உறவு மட்டும் வலுவாக இருந்து பெற்றோர் பிள்ளை உறவு வலுவிழந்து இருப்பது முற்றிலும் தவறு. எனவே இரண்டு உறவுக்கும் சமமான நேரம் ஒதுக்குவது அவசியம். உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து உங்களது காதலை வளருங்கள். சிறிது நேரம் இருவரும் சேர்ந்து பிள்ளைகளுடன் விளையாடுங்கள். 

7. குழந்தைகள் இல்லாத சுற்றுலா 

ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறையாவது குழந்தைகள் இல்லாத சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள். குழந்தைகளை உங்களது பெற்றோர்களின் கவனிப்பில் விட்டுவிட்டு தனியாக நீங்கள் இருவரும் அமைதியான அல்லது உங்களுக்கு பிடித்த ஏதேனும் இடத்திற்கு சென்று வருவது உங்களது பிஸியான வாழ்க்கையை புதுப்பித்துக்கொண்டது போல இருக்கும்.

Leave a Reply

%d bloggers like this: