மிளிரும் சருமமும், கருமையான கூந்தலும் பெற உதவும் 7 உணவுகள்..!

பெண்களுக்கு அழகிய சருமம் மற்றும் கருமையாக வளர கூடிய கூந்தல் என்றாலே எப்போதும் பிரியம் தான். குழந்தையில் முடி குறைவாக இருக்கும் போதே பெரியவர்களின் செயற்கை முடியை வைத்து முடி நீளமாக இருப்பதாக மகிழ்ச்சியடைவார்கள். வளர வளர விதவிதமான வடிவங்களில் முடியை வெட்டி கொள்வதை விரும்புவார்கள். முகத்தின் பொலிவை பெற அழகு நிலையங்களுக்கு செல்லுதல், விளம்பரங்களில் பார்த்து கண்ட களிம்புகளை வாங்கி பூசி கொள்ளுதல் போன்றவற்றை செய்கிறார்கள். இவை அனைத்தும் எளிதில் மறைவதோடு, பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். நீங்கள் உண்ணும் உணவின் மூலமே நிரந்தர அழகை தக்க வைக்கலாம். இங்கு அதற்கு நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளை பார்க்கலாம்.  

 

1 தக்காளி

இது எளிதில் கிடைக்க கூடிய ஒன்று. தக்காளியில் உள்ள விட்டமின் சி மற்றும் லைகோபீன் ஆகிய இரண்டும் உங்கள் சருமத்தை புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாக்கின்றது. தக்காளியை பச்சையாகவோ அல்லது உணவில் சேர்த்தோ சாப்பிடலாம்.

2 முட்டை

முட்டையில் புரதம் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது. ஜிங்க் உடலில் உள்ள பழுதடைந்த செல்களை சரி செய்ய உதவுவதோடு செல்களுக்கு புத்துணர்வையும் தருகிறது. புரதம் உங்கள் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது.

3 காலே

காலே கீரையில் அதிக அளவில் வைட்டமின் கே உள்ளது. இது சருமத்தை இறுகச் செய்து, சருமத்தின் சுருக்கத்தை போக்குகிறது. இதை வாரம் இருமுறை எடுத்து கொண்டால் நல்ல பலன் தரும்.

4 தயிர்

தயிர் கூந்தல் மற்றும் சருமத்திற்கு மிகச் சிறந்த உணவாகும், இது சருமத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது. இதை சருமம் மற்றும் கூந்தலிற்கு மாஸ்க் ஆகவும் பயன்படுத்தலாம். தினமும் உணவில் எடுத்துக் கொண்டால், நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.

5 சால்மன் மீன்

சாலமன் மீனில் உள்ள ஒமேகா சுருக்கமில்லா இளமையான சருமத்தை தர வல்லது. தழும்புகளையும் மறையச் செய்யும். கூந்தல் அடர்த்தியாக வளர தேவையான அமினோ அமிலங்கள் இதில் இருக்கிறது. முடிந்த வரை தவிர்க்காமல் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

6 பாதாம்

பாதாமில் அதிக அளவில் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால், செல் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால் இளமையான சருமத்தையும், சுற்றுபுற சூழ் நிலையால் உண்டாகும் கூந்தல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.

7 சர்க்கரை வள்ளிக் கிழங்கு

இதில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இது முதுமையை தடுப்பதோடு, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதை பச்சையாகவோ, வேகவைத்தோ அல்லது சமைத்தோ உங்கள் விருப்பப்படி சாப்பிடலாம்.

Leave a Reply

%d bloggers like this: