இரவு படுக்கைக்கு செல்லும் முன் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்

உணவே மருந்து என்பார்கள். ஆனால் மருந்தாய் இருக்க கூடிய அத்தகைய உணவே நஞ்சாகவும் மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா? நாம் சரியாக வேலை செய்கிறோமோ இல்லையோ நம் உடல் வேலை செய்ய துவங்கி விடும். நாம் காலை உணவை தவிர்க்காமல் உண்ண வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், காலை மற்றும் இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நேரத்தில் வேலை செய்ய துவங்கும். இதனால், உணவை சரியான நேரத்தில் எடுத்து கொள்வது சிறந்தது. இங்கு நாம் படுக்கைக்கு செல்லும் முன் தவிர்க்க வேண்டிய 8 உணவுகளை பற்றி பார்க்கலாம். 

1 பால்

பாலில் அதிக அளவில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது. உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இரவில் பால் குடிக்கும் போது அதிலிருக்கும் லேக்டோஸ் பெரும்பாலானவர்களுக்கு செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இரவில் அதிக அளவில் லேக்டோஸ் மற்றும் சர்க்கரை எடுத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருக்கும்.

2 பாஸ்தா

நீங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்தால் இரவு உணவில் ஹார்போஹைட்ரெட் சேர்த்து கொள்ளலாம். அப்போது நீங்கள் பாஸ்தாவை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் இதிலிருக்கும் கொழுப்பு உங்கள் இடுப்பு பகுதியில் சேர துவங்கும். பாஸ்தாவில் அதிக அளவில் ஹார்போஹைட்ரெட் நிறைந்திருக்கிறது. இதனால் 400 கலோரிகள் வரை உங்கள் உடலினுள் தங்கி விடும்.

3 சாக்லேட்

மற்ற இரவு நேர உணவுகளை விட சாக்லேடில் அதிக அளவில் சர்க்கரை மற்றும் கொழுப்பு பொருள்கள் நிறைந்திருக்கின்றன. மேலும் காபின் எனும் நச்சு பொருளும் இதில் உள்ளது. உங்கள் உடல் எடையை அதிகரிப்பதோடு சாக்லேட் உங்கள் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும்.

4 பிஸ்சா

உடலை கட்டுகோப்பாக பராமரித்து வருபவர்கள் பிஸ்சாவை தவிர்ப்பது சிறந்தது. அதிலும் குறிப்பாக இது இரவு நேரத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டிய ஒன்று. இதில் அதிக அளவிலான கலோரிகள் நிறைந்திருக்கின்றன. மேலும் இதில் நிறைந்திருக்கும் அளவுக்கு அதிகமான ஹார்போஹைட்ரெட் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் உங்களை நடு இரவில் எழ செய்யும். மேலும் உங்கள் இரத்தில் அதிக அளவில் கலோரிகள் சேர்வதோடு, உடல் எடையையும் அதிகரிக்கிறது.

5 ஆப்பிள்

ஆப்பிள் தோலில் நிறைந்திருக்கும் பெக்டின் குறைவான சர்க்கரை மற்றும் கொழுப்பை கொண்டிருக்கிறது. ஆனால் இதை இரவில் உண்ணும் போது செரிமான பிரச்சனையும், வயிற்றில் சுரக்க கூடிய அமிலங்களின் அளவையும் அதிகப்படுத்துகிறது.

6 அரிசி

இது உடலுக்கு தேவையான கார்போஹைடிரேட்டை கொடுத்தாலும், இரவில் உண்ணும் போது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

7 தக்காளி

இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் இரவில் எடுத்து கொள்ளும் போது வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் கொண்டதாகவும் இருக்கிறது.

8 சிவப்பு இறைச்சி

இதில் அதிக அளவில் புரதம் மற்றும் இருப்பு சத்துக்கள் நிறைந்திருக்கிறது. மேலும் இது செரிப்பதற்கு 5 மணி நேரம் எடுப்பதால், இரவு உறங்குவதற்கு முன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

9 வாழைப்பழம்

இதில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பி6 போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. இது செரிமான பிரச்சனைகளை சரி செய்வதோடு, நெஞ்செரிச்சலை குணமாக்கவும் உதவுகிறது. ஆனால் இரவில் உண்ணும் போது, செரிமானத்தை பாதிப்பதோடு சளியையும் ஏற்படுத்துகிறது.

10 காபி

இதில் காபின் எனும் நச்சு பொருள் கொண்டது. இது காலை நேரத்தில் உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தினாலும், இரவில் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். இரவில் உறங்க செல்லும் முன் காபியை தவிர்ப்பது சிறந்தது.

Leave a Reply

%d bloggers like this: